Categories: Cinema News latest news throwback stories

எம்ஜிஆர் மீது அளவற்ற பாசம் வைத்திருந்த சிவாஜி!.. அதற்கு உதாரணமாக இருந்த ஒரு சுவாரஸ்ய நிகழ்வு..

தமிழ் சினிமாவில் ஒரு பெரும் ஜாம்பவான்களாக சினிமாவை ஆட்சி செய்து கொண்டிருந்தவர்கள் நடிகர் திலகம் சிவாஜி மற்றும் மக்கள் திலகம் எம்ஜிஆர். இருவருமே மேடை நாடகங்களில் நடித்து அதன் மூலம் புகழ்பெற்று பின் வெள்ளித்திரையில் நுழைந்தவர்கள். நடிப்பிற்கு இலக்கணமாக இருந்தார் சிவாஜி.

sivaji mgr

அதே போல் வீரத்திற்கு ஒரு உதாரணமாக விளங்கினார் எம்ஜிஆர். இருவரும் அவரவர் பாணியில் முன்னேறிக் கொண்டிருந்தார்கள். சிவாஜியின் படங்கள் பெரும்பாலும் சரித்திரக் கால படங்களாகவும் குடும்பப் பாங்கான படங்களாகவும் வெளியாகி மக்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தன.

ஒரு பக்கம் எம்ஜிஆர் ஆக்‌ஷன் படங்களில் கலக்கிக் கொண்டிருந்தார். அதனாலேயே அவருக்கு அதிகளவிலான ரசிகர்கள் உருவாகினர். குறிப்பாக வாளை ஏந்தி சண்டை போட்டால் பார்க்கும் ரசிகர்களின் ஆரவாரத்துடன் திரையரங்கே ஒரு போர்க்களமாக மாறிவிடும்.அந்த அளவுக்கு வாள் சுத்துவதில் வல்லவராக விளங்கினார் எம்ஜிஆர்.

sivaji mgr

தொழிலில் இருவருக்கும் போட்டிகள் இருந்தாலும் சொந்த வாழ்க்கையில் இவர்களைப் போல யாரும் அந்த அளவுக்கு பாசமாக பழகியதே இல்லை என்று சொல்லலாம். அதற்கு ஒரு சிறந்த உதாரணமாக சித்ரா லட்சுமணன் ஒரு சம்பவத்தை பற்றி கூறியிருந்தார். அதாவது ஒரு பத்திரிக்கையில் எம்ஜிஆரை பற்றி சிவாஜி கூறும் போது,

‘எம்ஜிஆர் எப்பேற்பட்ட நடிகர்? அவரின் திறமை இந்த உலகத்திற்கும் அப்பாற்பட்டது, யாராலும் அதை அவரிடம் இருந்து பறிக்க முடியாது, மேலும் திரையில் அவர் வாள் ஏந்தி சுற்றும் விதம் யாருக்கு தெரியும்? அவர் யாரையும் வாளை வைத்து சண்டை போடாதீர்கள் என்று சொன்னாரா? ஆனாலும் அவர் அளவுக்கு இன்று வரை வாள் ஏந்தி சண்டை செய்யும் திறமை வாய்ந்த நடிகர்கள் வரவில்லையே?’ என்று மிகவும் சிலாகித்துக் கூறினாராம்.

sivaji mgr

அதே போல் நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றியும் எம்ஜிஆர் பல மேடைகளில் உருகி பேசியிருக்கிறாராம். தொழிலில் போட்டிகள் இருந்தாலும் சொந்த வாழ்க்கையில் திலகங்களாக விளங்கிய நடிகர் திலகம், மக்கள் திலகம் இவர்களை போல் இன்று வரை தமிழ் சினிமாவில் யாரையும் பார்த்ததில்லை என்று சித்ரா லட்சுமணம் மிகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

இதையும் படிங்க : அஜித் கொடுத்த பணத்தை தூக்கி எறிந்த விஜயகாந்த்.. இப்படியெல்லாம் நடந்திருக்கா?!…

Published by
Rohini