Connect with us
sivaji

Cinema News

நடிகரின் கன்னத்தில் அறைந்த தயாரிப்பாளர் – பக்கத்து செட்டில் இருந்த சிவாஜி என்ன செய்தார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் ஜெமினி கணேசன் சாயலுடனும் சிவாஜியின் நடிப்பையும் ஒன்றி காணப்பட்ட ஒரே நடிகர் ஏவிஎம் ராஜன். புதுக்கோட்டையில் பிறந்த ஏவிஎம் ராஜன் ஒரு முருக பக்தர் ஆவார். இவர் முதன் முதலில் ஏவிஎம் ப்ரொடக்சன் தயாரித்த நானும் ஒரு பெண் என்ற திரைப்படத்தில் நடித்ததனால் அன்றிலிருந்து ஏவிஎம் ராஜன் ஆனார்.

sivaji1

sivaji1

அந்தப் படத்தில் ராஜனுக்கு ஜோடியாக புஷ்பலதா நடித்த அதனால் தான் என்னவோ இருவரும் உண்மையிலேயே ஜோடியாக ஆனார்கள். நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றாலும் நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்ற தலக்கணம் இல்லாமல் ஒரு இரண்டாம் கதாநாயகனாக அனைத்து படங்களிலும் தோன்றி நல்ல நடிகன் என்பதை நிரூபித்தார் ராஜன்.

எம்ஜிஆர் சிவாஜி ஜெமினி கணேசன் என அனைத்து நடிகர்களுடனும் இரண்டாம் கதாநாயகனாக நடித்த ராஜன் தன் தலைமுறை நடிகர்களான ஜெய் சங்கர், சிவக்குமார், ரவிச்சந்திரன், முத்துராமன் போன்ற நடிகர்களின் படங்களிலும் ஒரு இரண்டாம் கதாநாயகனாக நடித்தார்.

sivaji2

sivaji2

இருந்தாலும் சிவாஜியுடன் மட்டுமே ஏகப்பட்ட படங்களில் இணைந்து நடித்திருக்கிறார் ராஜன் .அதனாலயே சிவாஜிக்கு ராஜன் மீது ஒரு தனி பிரியமும் அக்கறையும் இருந்ததாம். இந்த நிலையில் ராஜன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் இணைந்து நடித்த படம் புகுந்த வீடு. அந்தப் படத்தை தயாரித்தவர் ஜி சுப்ரமணியம்.

அந்தப் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் சுப்பிரமணியனுக்கும் ராஜனுக்கும் ஏதோ தகராறு ஏற்பட சுப்ரமணியம் ராஜனின் கன்னத்தில் அறைந்து விட்டாராம். இதை பக்கத்து செட்டில் படப்பிடிப்பில் இருந்த சிவாஜி இடம் ராஜன் ஓடிப்போய் சொல்லி இருக்கிறார். அதைக் கேட்டதும் சிவாஜி கோபம் கொண்டு சுப்ரமணியனை கண்டித்து ஓங்கி அறைந்தும் விட்டாராம். அந்த அளவுக்கு ராஜன் மீது சிவாஜி அதிக அன்பு கொண்டிருந்ததாக செய்திகள் வெளிவந்தன.

sivaji3

avm rajan

இதையும் படிங்க : சரத்பாபு முன்னாள் மனைவிக்கு மாதா மாதம் பணம் அனுப்பிய நடிகர் – யாருன்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க!..

Continue Reading

More in Cinema News

To Top