Categories: Cinema News latest news throwback stories

‘ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு’ன்னு சிவாஜியோட ஜோடி போட்ட கதாநாயகிகள்… யார் யார்னு தெரியுமா?

நடிகர் திலகம் சிவாஜியுடன் 60 கதாநாயகிகளுக்கு மேல் ஜோடியாக நடித்துள்ளார்கள். இவர்களில் கே.ஆர்.விஜயா, பத்மினி 30 படங்களுக்கும் மேல் ஜோடியாக நடித்துள்ளார்கள். கே.ஆர்.விஜயா முதல் 100 படங்களில் சிவாஜிக்கு ஜோடியாக நடிக்கவில்லை. ஆனால், பத்மினி சிவாஜியின் 2வது படத்தில் இருந்தே ஜோடியாக நடித்துள்ளார்.

ஜெயலலிதா 18 படங்களும், சரோஜாதேவி 17 படங்களும், சுஜாதா 16 படங்களும், தேவிகா 12 படங்களும், ஸ்ரீபிரியா, சௌகார் ஜானகி, சாவித்திரி ஆகியோர் தலா 11 படங்களும், வாணிஸ்ரீ, மஞ்சுளா தலா 9 படங்களும் நடித்துள்ளார்கள்.

இதையும் படிங்க… அப்படியா எழுதினார் வைரமுத்து? நாள் முழுவதும் காத்துக் கிடந்த பாரதிராஜா

பண்டரிபாய் 8 படங்களும், பானுமதி, லட்சுமி, ஜமுனா தலா 7, எம்என்.ராஜம் 6, உஷா ரஞ்சனி 5, ஸ்ரீவித்யா, வைஜெயந்தி மாலா, வரலட்சுமி தலா 3, வடிவுக்கரசி, பாரதி, விஜயகுமாரி, அம்பிகா, ராதா, ஸ்ரீதேவி, கிருஷ்ணகுமாரி, வசந்தா, சாரதா, அஞ்சலிதேவி, மைனாவதி, லலிதா, ராஜசுலோசனா தலா 2 படங்களிலும் நடித்துள்ளார்கள். ஒரே படத்தில் மட்டும் கதாநாயகியாக நடித்தவர்கள் யார் யார் என பார்ப்போம்.

சபாஷ் மீனாவில் மாலினி, கூண்டுக்கிளியில் பி.எஸ்.சரோஜா, மனிதனும் மிருகமும் படத்தில் மாதுரி தேவி, பாக்தாத் திருடன் படத்தில் மணிமாலா, வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் எஸ்.வரலட்சுமி, கப்பலோட்டிய தமிழன் படத்தில் ருக்மணி, பலே பாண்டியாவில் சந்தியா ஆகியோர் ஜோடியாக ஒரே படத்தில் மட்டும் நடித்துள்ளனர். இவர்களில் சந்தியா நடிகை ஜெயலலிதாவின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.

En Aasa Raasave

பாவை விளக்கு படத்தில் குமாரி கமலா, தங்கச்சுரங்கம் படத்தில் பாரதி, தங்கைக்காக படத்தில் வெண்ணிற ஆடை நிர்மலா, சிவகாமியின் செல்வன் படத்தில் லதா ஆகியோரும் ஒரே படத்தில் தான் ஹீரோயின்.

சிவந்த மண் படத்தில் காஞ்சனா, பாபுவில் விஜயஸ்ரீ, ஞான ஒளியில் விஜய நிர்மலா, வைர நெஞ்சம் படத்தில் பத்ம பிரியா, பைலட் பிரேம்நாத் படத்தில் மாலினி பொன்சேகா, திரிசூலம் படத்தில் ரீனா ஆகியோரும் ஜோடியாக நடித்துள்ளனர்.

மோகன புன்னகையில் சிலோன் கீதா, பட்டாக்கத்தி பைரவனில் ஜெயசுதா, கவரிமான் படத்தில் பிரமீளா, சிம்ம சொப்பனம் படத்தில் சரிதா, நீலவானம் படத்தில் ராஜஸ்ரீ ஆகியோரும் ஒரே ஒரு படத்தில் மட்டும் தான் சிவாஜிக்கு ஜோடியாக நடித்துள்ளனர்.

ஞானப்பறவை படத்தில் மனோரமா, வீரபாண்டியனில் சுமித்ரா, என் ஆசை ராசாவே படத்தில் ராதிகா ஆகியோரும் ஒரே படத்தில் மட்டும் தான் ஜோடி சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v