Categories: Cinema News latest news throwback stories

குண்டுசட்டிக்குள் கதையை ஓட்டினால் படம் எப்படி வெற்றிபெறும்? தோல்வியை ஒப்புக்கொண்ட சிவாஜி…!

பெரும்பாலான நடிகர்கள் தங்கள் படம் ஏன் தோல்வி அடைந்தது என்று கேட்டால் அதற்கு ரொம்பவும் கோபப்படுவார்கள். இதை இயக்குனரிடம் போய் கேளுங்கள் என்று சொல்வார்கள். அல்லது அந்தக் கேள்விக்குப் பதிலே சொல்ல மாட்டார்கள்.

ஆனால் இங்கு ஒரு அதிசயம் நடந்துள்ளது. நடிகர் திலகம் சிவாஜி தான் அந்த அதிசயத்தையும் நிகழ்த்தியுள்ளார். இது குறித்து பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் சில தகவல்களைத் தெரிவித்துள்ளார். அது என்னன்னு பார்க்கலாமா…

இதையும் படிங்க… கமலா இல்ல பயில்வான் ரெங்கநாதனானு தெரியல! இந்தியன் தாத்தாவை வச்சு செய்த பிரபலம்

பொதுவாக ஒரு நடிகர் எந்தப் படத்தில் நடித்தாலும் அந்தப் படம் வெற்றிப்படம் என்று தான் கடைசி வரை வாதிடுவார். ஏ.பி.நாகராஜன் இயக்க சிவாஜி நடிப்பில் வெளியான படம் ராஜ ராஜ சோழன். அது வெற்றிப்படமாக அமையவில்லை என்று பல பத்திரிகை பேட்டியில் சிவாஜியே ஒப்புக்கொண்டார். அதேநேரம் ஏன் அந்தப் படம் வெற்றி பெறவில்லை என்றும் காரணங்களைச் சொல்லி இருக்கிறார்.

எப்பவுமே இதுபோன்ற சரித்திரக் கதைகளைப் படமாக்கும்போது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். மிகப்பெரிய அளவில் செலவு செய்து பிரம்மாண்டமாக அதுபோன்ற படங்களை உருவாக்க வேண்டும். அந்தப் படத்தில் வரும் யுத்தக்காட்சியில் யானை, குதிரை என ஆயிரக்கணக்கில் காட்ட வேண்டும்.

ஒரு சின்ன பாளையக்காரரான கட்டபொம்மனையே மாபெரும் சக்கரவர்த்தியைப் போல காட்டியிருப்பார். அப்படி இருக்கும்போது ராஜராஜசோழனை எப்படி காட்டி இருக்க வேண்டும்? ஆனால் அந்தப் படத்தில் அதை எல்லாம் சரியாகச் செய்யவில்லை. ஆனால் ஒரு குடும்ப நாடகத்தைப் போலத் தான் தயாரித்திருந்தார்.

நாடகத்துக்கு அது ஒத்து வரும். ஆனால் திரைப்படத்துக்கு அது ஒத்து வருமா? அக்கா, மகன், மருமகள் என்று குண்டுச்சட்டிக்குள்ளே அதன் கதையை ஓட்டியதால் தான் அந்தப்படம் வெற்றி பெறவில்லை. அதனால் தான் அந்தப்படம் வெற்றிபெறவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க… என்னது இது யுவன் போட்ட பாட்டே இல்லையா? அதான் இந்த லட்சணத்துல இருக்கா? பீதியை கிளப்பிய தகவல்

1973ல் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் ராஜ ராஜ சோழன் படத்தில் சிவாஜி கணேசன், விஜயகுமாரி உள்பட பலர் நடித்துள்ளனர். குன்னக்குடி வைத்தியநாதன் இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v