தமிழ் சினிமாவில் ஒப்பற்ற நடிகராக விளங்கியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவரின் நடிப்பில் பல அற்புதமான படைப்புகளை கண்டு நாம் ரசித்திருக்கிறோம். புராண படங்களில் இருந்து குடும்ப படங்களை வரை அனைத்துக் காட்சிகளிலும் இவரின் நடிப்பு ரசிக்கத்தக்கனவையாகும்.
அந்த காலங்களில் இவருக்கும் சரி எம்.ஜி.ஆருக்கும் சரி ஒரு தனி மரியாதையே உண்டு என நாம் அறிந்ததே. இந்த நிலையில் படப்பிடிப்பில் ஒட்டு மொத்த படக்குழுவினருடன் ஒருவருக்காக மட்டுமே 15 நாள்கள் படப்படிப்பு இல்லாமல் காத்துக் கொண்டிருந்திருக்கிறார் சிவாஜி. யாருனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீர்கள்.
இதையும் படிங்க : பாலிவுட்ல இல்லாத நடிகர்களா?.விஜயுடன் தோனி இணையும் கூட்டணியின் பின்னணி காரணம் இதோ!..
ஸ்ரீதர் இயக்கத்தில் சிவாஜி, கே.ஆர்.விஜயா, முத்துராமன், எல். விஜயலட்சுமி போன்றோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஊட்டி வரை உறவு திரைப்படம். இந்த படத்தின் 15 நாட்கள் படப்பிடிப்பினை ஊட்டியில் நடத்துவதற்காக ஸ்ரீதர் ஒட்டுமொத்த நட்சத்திரங்களுடன் ஊட்டிக்கு சென்றிருக்கிறார். அனைவரும் படப்பிடிப்பில் இருக்க ஒருவர் மட்டும் வர மறுத்து விட்டாராம்.
அவர் தான் சூரியன். சூரியன் வெளிச்சம் இல்லாமல் 15 நாட்கள் ஊட்டியிலேயே படப்பிடிப்பு இல்லாமல் தவித்திருக்கின்றனர். பொறுத்திருந்து பார்த்து சென்னைக்கே திரும்பி இருக்கின்றனர். சிறிது நாட்கள் கழித்து செப்டம்பர் இறுதியில் படப்பிடிப்பை ஊட்டியில் நடத்தியிருக்கின்றார் ஸ்ரீதர். படம் வெளியாகி மாபெரும் வெற்றியை ருசித்தது. ஒரு சூரியனுக்காக படப்பிடிப்பை ரத்து செய்தது புதுமையான அனுபமாக இருந்திருக்கும் இந்த படக்குழுவிற்கு.
தனுஷ் இயக்கத்தில்…
Nayanthara: கடந்த…
TVK Vijay:…
TVK Vijay:…
Karur: தவெக…