Connect with us
sivaji

Cinema News

சிவாஜி நடித்த கேரக்டரில் அந்த நடிகரா? மறுப்பு தெரிவித்த இயக்குனர்.. படத்தோட நிலைமை என்ன தெரியுமா?

Actor Sivaji: தமிழ் சினிமாவில் நடிப்பின் இமயமாக கருதப்பட்டவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதை அப்படியே உள்வாங்கிக் கொண்டு அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். நடிப்பிற்காக தன்னை எந்தளவு தயார் படுத்திக் கொள்வார் என அனைவருக்குமே தெரிந்த விஷயம். அவர் நடித்து பெரிய அளவில் வெற்றிப் பெற்ற படம் தெய்வப்பிறவி.

அந்தப் படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக பத்மினி நடித்திருப்பார். படத்தை மெய்யப்பச் செட்டியார் தயாரிக்க கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அந்தப் படத்தை இயக்கியிருந்தார். தமிழில் இந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றிப் பெற்றதும் ஹிந்தியிலும் இந்தப் படத்தை எடுக்க வேண்டும் என மெய்யப்பச்செட்டியார் விரும்பினார்.

இதையும் படிங்க: புளியங்கொம்பா புடிக்கும் ஸ்ருதிஹாசன்!.. திடீர்னு கமல் பொண்ணுக்கு அடிக்கும் அடுத்தடுத்த ஜாக்பாட்!..

இதை கோபாலகிருஷ்ணனிடமும் தெரிவிக்க அவரும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ஆனால் அவருடைய சந்தோஷத்தை நிமிடத்தில் கலைத்தார் மெய்யப்பச்செட்டியார். இந்தப் படத்தில் சிவாஜி நடித்த கதாபாத்திரத்தில் சதானி என்ற ஹிந்தி நடிகரை நடிக்க வைக்க மெய்யப்பச்செட்டியார் விரும்பினார். ஆனால் கோபாலகிருஷ்ணனுக்கு இதில் விருப்பமில்லை.

அதனால் மறைமுகமாக எவ்வளவு சொல்லியும் கேட்காத மெய்யப்பச்செட்டியாரிடம் கோபாலகிருஷ்ணன் ‘ஹிந்தியில் திலீப் ராஜ்குமார் போன்றவர்களின் படங்கள் தமிழில் ரீமேக் செய்தால் யாரை நடிக்க வைப்பீர்கள்’ என்று கேட்டார். அதற்கு மெய்யப்பச்செட்டியார் சிவாஜிதான் என்று கூற அப்போ சிவாஜியின் படத்தில் திலீப் ராஜ்குமார் நடித்தால் தானே நன்றாக இருக்கும் என கோபாலகிருஷ்ணன் கூறினார்.

இதையும் படிங்க: விரும்புகிறேன் படத்தில் நடிச்சது சினேகாவே இல்லையாம்… ஏமாத்திட்டாங்க மக்கா!

ஆனால் அதை கொஞ்சம் கூட காது கொடுத்து கேட்காத மெய்யப்பச்செட்டியார் சதானியையே நடிக்க வைக்க ஹிந்தியில் அந்தப் படம் வெற்றிப் பெற்றதா என்றால் இல்லை. மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது.

Continue Reading

More in Cinema News

To Top