சினிமா துறையில் இருப்பவர்கள் பணம் அதிகமாக வந்துவிட்டால் ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதில் படங்களை தயாரித்து இன்னும் பணங்களை அதிகம் சம்பாதிப்பது உண்டு. அப்படி, பல நடிகர்கள் சொந்தமாக தயாரிப்பு நிறுவனமும் வைத்துள்ளார்கள். குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயனும் எஸ்கே ப்ரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதில் சில படங்களை தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்பொழுது அனிருத்தும் சிவகார்த்திகேயனும் இணைந்து ஒரு புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கவுள்ளதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது. இருவரும் சினிமாவை தாண்டி நெருங்கிய நண்பர்களும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். இதனையடுத்து, சிவகார்த்திகேயனுக்கு எஸ்கே ப்ரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனம் உள்ளது.
எனவே, அனிருத் தனியாக தயாரிப்பு நிறுவனம் தொடங்க கொஞ்சம் பதட்டமாக இருப்பதால் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க உள்ளாராம். முழுக்க முழுக்க கமெர்ஷியல் படமாக மட்டுமில்லாமல் நல்ல கதை அமைப்புடன் தயாரிக்கத் திட்டமிட்டு வருகின்றார்களாம்.
இதையும் படியுங்களேன்-நம்ப வைத்து ஏமாற்றினாரா கமல்ஹாசன்.?! பிக் பாஸ் பிரபலத்தால் ஏற்பட்ட சர்ச்சை… பின்னணி என்ன.?!
தங்களது தயாரிப்பில் உருவாகும் படத்தை இயக்கும் இயக்குநர்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கவும் தீர்மானித்து இருக்கிறார்கள். மேலும் சிவகார்த்திகேயன் அனிருத்துடன் இணைந்து ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கினால் சிவகார்த்திகேயன் பட தயாரிப்பு நிறுவனம் நிலமை என்ன ஆவது என்ற கேள்வியும் எழும்பியுள்ளது.
Karur: தவெக…
TVK Vijay:…
நடிகரும் தவெக…
TVK Karur:…
Vijay TVK…