சிவகார்த்திகேயனை விட குறைந்து போனதா தனுஷ் மார்க்கெட்? பிரபலம் சொல்லும் 'நச்' பதில்!
சமீபத்தில் வெளியான தனுஷ் நடித்த கர படம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்ததா என்றால் அப்படி ஒன்றும் இல்லை. ஆனால் கலவையான விமர்சனம் தான் பெற்றது. எவ்வளவு பெரிய நடிகர் இவர்? இவரது படத்துக்கே இப்படி தான் ரிவியூவான்னு பலரும் வியந்தனர்.
அதே நேரம் இவருக்குப் பின் திரைக்கு வந்த சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி சக்கை போடு போட்டதே. அதுவும் தனுஷ் வளர்த்து விட்டவர் தானே சிவகார்த்திகேயன் என்று எல்லாம் கேள்வி எழுந்தது. இதற்குப் பதில் சொல்கிறார் இந்த பிரபலம்.
சிவகார்;த்திகேயனோட பராசக்தி படமும், தனுஷோட கர படமும் கலவையான விமர்சனங்களைத் தான் வாங்கின. ஆனாலும் பராசக்தி படம் முதல் நாளில் 27 கோடி ரூபாய் வசூலித்தது. தனுஷோட கர படம் வெறும் 10 கோடி ரூபாய்க்கும் கீழ் தான் வாங்கியுள்ளது.
தனுஷோட மார்க்கெட் குறைந்து போனதா என்று ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.
சிவகார்த்திகேயனோட பராசக்தி படத்தையும், தனுஷோட கர படத்தையும் எப்படி ஒரே தராசு தட்டுல வச்சிப் பார்க்குறீங்கன்னு தெரியல. பராசக்தி படத்தைப் பொருத்தவரை சிவகார்த்திகேயன் மட்டும் ஸ்டார் இல்ல. ரவி மோகன், அதர்வா போன்ற மல்டி ஸ்டார் நடித்த படம். ஆனால் கர அப்படி அல்ல. தனுஷ் மட்டும் நடித்து இருந்த படம் என்கிறார் சித்ரா லட்சுமணன்.
