Categories: Cinema News latest news

வாய்ப்பு வாங்கி கொடுத்ததால் மட்டம் தட்டிய தனுஷ்… உஷாரான சிவகார்த்திகேயன்…!

கோலிவுட்டில் டாப் நடிகராக வலம் வரும் தனுஷும், டாப் நடிகராக வளர்ந்து வரும் சிவகார்த்திகேயனும் ஆரம்ப காலத்தில் நல்ல நண்பர்களாக இருந்ததும் தற்போது இவர்களுக்கிடையே பிரச்சனை நடந்து வருவதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். தற்போது இந்த பிரச்சனைக்கான காரணம் தெரிய வந்துள்ளது.

அதன்படி தனுஷ் அவரின் தயாரிப்பு நிறுவனம் மூலம் முதன் முதலில் அவர் நடிப்பில் உருவான 3 படத்தை தயாரித்த போது அப்படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் 3 படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கினார். அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான எதிர்நீச்சல் படத்தை தனுஷ் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எதிர்நீச்சல் படத்தின் வெற்றிக்கு பின்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனால் சிவகார்த்திகேயன் அவரின் சம்பளத்தை உயர்த்தி விட்டார். அந்த சமயத்தில் தனுஷ் அவரின் தயாரிப்பில் நடிக்க சிவகார்த்திகேயனுக்கு அழைப்பு விடுத்தாராம்.

இதையும் படிங்க: நான் இயக்க வேண்டியதை அவர் தட்டி பறிச்சிட்டார்.! வெற்றிமாறன் பகீர் பேட்டி.!

சிவகார்த்திகேயனும் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் எதிர்நீச்சல் படத்திற்கு வாங்கிய அதே சம்பளம் தான் வழங்கப்படும் என தனுஷ் கூற சிவகார்த்திகேயனோ அவரது அப்போதைய மார்க்கெட்டுக்கு ஏற்ப சம்பளம் கேட்டுள்ளார். இதனால் கடுப்பான தனுஷ், “நான் பார்த்து வாய்ப்பு கொடுத்து வாழ்க்கை கொடுத்த பையன் நான் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு நடித்துவிட்டுப் போக வேண்டியதுதானே” என கூறியுள்ளாராம்.

 

இதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயனோ, “எனக்கு சினிமா வாய்ப்பு கொடுத்தேன் என்று வேண்டுமானால் சொல்லுங்கள். ஆனால் வாழ்க்கை கொடுத்தேன் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இனிமேல் நீங்கள் அதிக சம்பளம் கொடுத்தாலும் இனி நான் நடிக்க மாட்டேன்” என கூறிவிட்டாராம். தனுஷ் சிவாவை மட்டுமல்ல தான் அறிமுகம் செய்து வைத்ததால் அனிருத்தையும் இப்படி தான் நடத்துவார் என கூறப்படுகிறது.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா