Categories: Cinema News latest news

என்ன ஏலியன் இப்படி கோபப்படுது!.. மாஸ் காட்டும் அயலான் டிரெய்லர்.. பொங்கலுக்கு வசூல் வேட்டை தான்!

இன்று நேற்று நாளை படத்தை முடித்த கையோடு இயக்குநர் ரவிக்குமார் பல வருட உழைப்பை போட்டு உருவாக்கி உள்ள படம் தான் அயலான். சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள அயலான் திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், அந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது.

அயலான் படம் ஏலியன் படமாக உருவாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முதல் ஏலியன் படம் இதுதான் என்கிற அறிவிப்புடன் இந்த படம் தொடங்கப்பட்டது. அந்த காலத்திலேயே எம்ஜிஆர் வேற்று கிரகத்துக்கு செல்வது போல கலையரசி படத்தில் நடித்திருப்பார்.

இதையும் படிங்க: விஜயகாந்த் சமாதியில் மண்டிப்போட்டு வணங்கிய ஜெயம் ரவி.. கண்ணெல்லாம் கலங்கிடுச்சு.. அடுத்து யாரு?

ஆரி அர்ஜுனன் எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான் என ஒரு ஏலியன் படத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் இன்னமும் வெளியாகவில்லை. இந்நிலையில், சிவகார்த்திகேயனின் ஏலியன் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அதன் டிரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

டீசரை விட அயலான் டிரெய்லர் மேலும், ஏகப்பட்ட சுவாரஸ்ய காட்சிகளுடன் ரசிகர்களை கவர்ந்து இழுக்கிறது. அயலான் டிரெய்லரில் ஏலியனுக்கு சித்தார்த் கொடுத்த நிலையில், அவர் பேசும் காட்சிகளும், நானா ஏலியன்.. நீ ஏலியன், உங்க அம்மா ஏலியன், உங்க அப்பா ஏலியன்.. இன்னொரு முறை ஏலியன்னு சொன்னா நான் மனுஷனா மாறிடுவேன் என பேசும் வசனங்கள் எல்லாம் குழந்தைகளை எளிதில் கேட்ச் பண்ண வைத்து விடும் விதமாகவே உள்ளது.

இதையும் படிங்க: கலைஞர் 100வது விழாவுக்கு ‘நோ’ சொன்ன விஷால்!.. பின்னணியில் இருப்பது அந்த நடிகராம்!…

கேப்டன் மில்லர், அயலான்,  மிஷன் 1 மற்றும் மெரி கிறிஸ்துமஸ் உள்ளிட்ட தமிழ் படங்களும் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம், ஹனுமன் உள்ளிட்ட படங்களும் பொங்கலுக்கு வெளியாகின்றன.

Saranya M
Published by
Saranya M