×

மீண்டும் விஜய்தேவரகொண்டாவுடன் மோதிய சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ திரைப்படமும் விஜய்தேவரகொண்டா நடித்த ஹீரோ திரைப்படமும் ஒரே டைட்டிலை கொண்டதாக அமைந்ததால் இரு பட குழுவினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது
 

இந்த பிரச்சனை தயாரிப்பாளர் சங்கம் வரை சென்றது. ஆனால் திடீரென தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதால் இந்த பிரச்சனை முடிவுக்கு வராமலேயே சிவகார்த்திகேயனின் ’ஹீரோ’ திரைப்படம் ரிலீஸ் ஆகிவிட்டது

இதனை அடுத்து தற்போது விஜய் தேவர்கொண்டாவின் படமும் ஹீரோ என்ற தலைப்பிலேயே உருவாகி வருகிறது என்பதும் இந்தப் படம் இவ்வருடம் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ திரைப்படத்தை தெலுங்கில் டப் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை வாங்கிய கேஜேஆர் ஸ்டுடியோ ராஜேஷ் அவர்கள் தெலுங்கு டப்பிங் பணிகளை தற்போது கவனித்து வருகிறார்.

இந்த நிலையில் தெலுங்கிலும் இந்தப் படத்திற்கு ’ஹீரோ’ என்ற டைட்டில் வைக்க படக்குழுவினர் முடிவு செய்ததாக தெரிகிறது. ஆனாலும் இதற்கு விஜய்தேவரகொண்டாவின் ‘ஹீரோ’ படக்குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து தற்போது இந்த படத்திற்கு ’சக்தி’ என்ற டைட்டில் மாற்றி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த படத்தின் கதைக்கரு அனைத்து மொழிகளுக்கும் பொதுவானது என்பதால் இந்த படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட உள்ளதாகவும் இந்த படம் தமிழில் சுமாராகப் போனாலும் தெலுங்கில் நிச்சயம் நல்ல வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கேஜேஆர் ராஜேஷ் தெரிவித்துள்ளார். அவரது நம்பிக்கையை பலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 

From around the web

Trending Videos

Tamilnadu News