Categories: Cinema News latest news

விக்ரமின் மெகா ஹிட் படத்தை காப்பி அடித்த சிவகார்த்திகேயன்.? இணையத்தில்வச்சி செய்து வரும் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் சிவகார்த்திகேயன் டான் படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது இவர் நடிக்கவுள்ள 22-வது படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, சிவகார்த்திகேயனின் 22-வது படத்தை யோகி பாபுவை வைத்து மண்டேலா என்ற வெற்றி படத்தை கொடுத்த  மடோன் அஸ்வின் இயக்குகிறார். படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் அருண் விஸ்வா தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைக்கிறார்.

இந்த படத்திற்கு தமிழில் “மாவீரன்” என்றும் தெலுங்கில் “மஹாவீருடு” என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புடன் படத்தின் டைட்டில் டீசரும் வெளியிடபட்டுள்ளது.

இதையும் படியுங்களேன்- பழைய காலத்து கதை… லிங்குசாமி அவ்ளோதான்… கழுவி ஊற்றும் ரசிகர்கள்… அட்டர் பிளாப் வாரியர்.?!

வீடியோவில் 10 பேர் கொண்ட ஒரு கும்பல் முகமூடி அணிந்த சிவகார்த்திகேயனை தாக்குகிறார்கள். இதனால் அவருக்கு ரத்தம் வருவதுபோல, பின், அந்த கும்பல்கள் பின்வாங்கும்போது, ​​​​சிவகார்த்திகேயன் மீண்டும் உயிர்த்தெழுகிறார், அவர் தன்னுடன் இணைக்கப்பட்ட பொம்மை சரங்களின் உதவியுடன் கும்பலை எதிர்த்துப் போராடுவது போல கட்டப்பட்டுள்ளது.

இதே போல், விக்ரம் நடித்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான அந்நியன் திரைப்படத்தில் இதே போல ஒரு காட்சி வரும். ரவுடிகள் அம்பி விக்ரமை தூக்கி கொண்டு இதே போல அடித்து வருவார்கள். அதன் பின்னர் அவர்கள் விலகி நிற்கும் போது, சட்டென, அந்நியன் விக்ரமாக மாறி எழுந்து நின்று ரவுடிகளை புரட்டி எடுப்பார். அதே போன்று தான் இந்த காட்சி இருக்கிறது என நெட்சன்கள் மாவீரன் டீசரை கலாய்த்து வருகின்றனர்.

Manikandan
Published by
Manikandan