×

பழசை மறக்காத சிவகார்த்திகேயன்... வடிவேல் பாலாஜி குழந்தைகளுக்கு பேருதவி!..

 

விஜய் தொலைக்காட்சியின் பல நகைச்சுவை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. இன்று பிரபலமாக இருக்கும் சிவகார்த்திகேயன் மற்றும் ரோபோ சங்கர் ஆகியவர்களுக்கு மிகவும் நெருக்கமான நண்பர். 45 வயதாகும் அவர் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை செய்ய போதிய வசதி இல்லாத நிலையில் அரசு மருத்துவமனைக்கு அவரை குடும்பத்தினர் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கேயும் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டுக்கு நேரில் சென்ற நடிகர் விஜய் சேதுபதி வடிவேலு பாலாஜியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில், வடிவேல் பாலாஜியின் இரு குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றுக்கொள்வதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளாராம். இந்த தகவலை விஜய் தொலைக்காட்சியில் ‘கலக்கப்போவது’ நிகழ்ச்சியின் இயக்குனர் தாம்சன் சிலரிடம் பகிர்ந்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ‘அது இது எது’ நிகழ்ச்சியை சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய போது தாடி பாலாஜி அவருடன் இணைந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News