×

சிவகார்த்திகேயன் என்ன விஜயா?... தயாரிப்பாளர் நிலமையும் நினைச்சு பாருங்கப்பா!..

 
சிவகார்த்திகேயன் என்ன விஜயா?... தயாரிப்பாளர் நிலமையும் நினைச்சு பாருங்கப்பா!..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் 2020 ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டனர். ஆனால், கொரோனா பாதிப்பு பரவலை கட்டுப்படுத்த தியேட்டர்கள் மூடப்பட்டது. ஒருபக்கம் சூர்யா தனது சூரரைப்போற்று திரைப்படத்தை ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியிட்டார். எனவே, மாஸ்டர் படத்தையும் ஓடிடியில் வெளியிடலாம் என அப்படத்தின் தயாரிப்பாளர் முடிவெடுத்தார்.

ஆனால், அதற்கு சம்மதிக்காத விஜய் தியேட்டர்கள் எப்போது திறக்கிறதோ அப்போது மாஸ்டரை வெளியிடுவோம், ஓடிடியில் வெளியிடக்கூடாது என தடை போட்டார். விஜயே கூறிவிட்டதால் 8 மாதம் காத்திருந்து கடந்த வரும் நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு மாஸ்டரை தயாரிப்பாளர் வெளியிட்டார். ரசிகர்களுடம் தியேட்டரில் குவிந்து அப்படத்தை பார்த்து ரசிக்க அப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது.

அதேபோல் தற்போது நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இப்படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. ஆனால் 2 முறை ரிலீஸ் தேதி தள்ளிபோடப்பட்டது. இறுதியாக மே மாதம் இப்படத்தை தியேட்டரில் வெளியிட திட்டமிட்டிருந்தனர்.  ஆனால், கொரோனா பரவலை தடுக்க மீண்டும் தியேட்டர்கள் மூடப்பட்டுவிட்டதால் ஓடிடியில் வெளியிடலாம் என அப்படத்தின் தயாரிப்பாளர் விரும்புகிறாராம். 

ஆனால், விஜயை போலவே சிவகார்த்திகேயனுக்கும் இதில் உடன்பாடு இல்லையாம். டாக்டர் படத்தை தியேட்டரில் வெளியிடுங்கள் என தயாரிப்பாளரிடம் கூறிவருகிறாராம். ஆனால், அவர் பேச்சை தயாரிப்பாளர் கேட்பாரா என்பது தெரியவில்லை. அனேகமாக டாக்டர் திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் கூறியதை கேட்க அவர் ஒன்று விஜய் இல்லையே!.... காசு போட்டவருக்குதான் அந்த வலி புரியும் என தமிழ் சினிமா வட்டாரத்தில் சிரிக்கிறார்கள்..

அட அதுவும் உண்மைதான்!...
 

From around the web

Trending Videos

Tamilnadu News