Categories: Cinema News latest news

அடாது மழையிலும் விடாது டப்பிங்… டான் படத்தின் முழுவீச்சில் சிவகார்த்திகேயன்!

டான் படத்தின் டப்பிங் பணியில் நடிகர் சிவகார்த்திகேயன்!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பேமிலி ஆடியன்ஸை கவர்ந்த தளபதி விஜய்க்கு அடுத்தபடியாக நடிகரை சிவகார்த்திகேயன் குழந்தைகளின் பேவரைட் மற்றும் பேமிலி அடியன்ஸின் மனதை கவர்ந்த நடிகராக வளர்ந்து நிற்கிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது கேரியரை துவங்கிய நடிகர் சிவகார்த்திகேயன் 2012ம் ஆண்டு வெளியான மெரினா திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

அதையடுத்து மனம் கொத்திப் பறவை , கேடி பில்லா கில்லாடி ரங்கா , எதிர்நீச்சல், வருத்தபடாத வாலிபர் சங்கம் , மான் கராத்தே , ரஜினி முருகன், ரெமோ, நம்ம வீட்டு பிள்ளை என அடுத்தடுத்த படம் அவரை உச்ச நடிகராக வளர்த்தது. கடைசியாக வெளியான டாக்டர் திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்து அவரது கேரியரின் முக்கிய திரைப்படமாக அமைந்தது.

sivakarthikeyan

இதையும் படியுங்கள்:பழங்காலத்து பாப்பா… 80ஸ் ஹீரோயின் லுக்கில் எல்லோரையும் கிறங்கடித்த சமந்தா!

அந்த படத்தின் வெற்றி பிறகு சிகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் பல மடங்கு அதிகரித்துவிட்டது. தற்போது அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் ’டான்’ படத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இந்நிலையில் படத்தின் டப்பிங் வேளையில் முழுவீச்சில் இறங்கியுள்ள அவர் இன்ஸ்டாவில் ஸ்டுடியோவில் டப்பிங் பேசிக்கொண்டிருக்கும் போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு “அடாது மழையிலும் விடாது டப்பிங்” என பன்ச் கேப்ஷன் கொடுத்துள்ளார்.

பிரஜன்
Published by
பிரஜன்