Categories: Cinema News latest news throwback stories

அஜித்தின் சிட்டிசன் நாயகியை ஜோடியாக்க நினைத்த சிவகார்த்திகேயன்.. ச்ச ஜஸ்ட் மிஸ்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களே ஆச்சரியத்தில் பார்க்கும் வண்ணம் ஒருவரது வளர்ச்சி இருக்கிறது என்றால், அது சிவகார்த்திகேயன் வளர்ச்சியாக தான் இருக்கும். அவருக்கு பின்னால் வந்த பலர் என்னும் சினிமாவில் ஒரு இடம் கிடைக்க போராடிக் கொண்டிருக்கும்போது , சிவகார்த்திகேயன் அனைவரையும் முந்திக்கொண்டு டாப் 5 வரிசையில் அமர்ந்து விட்டார் என்றே கூறலாம்.

அவர் படங்களின் வரிசை எடுத்து பார்த்தால் அவர் தன் உடன் நடிக்கும் ஹீரோயின்கள் மார்க்கெட் உச்சத்தில் இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருப்பார் போல. அப்படித்தான் நயன்தாரா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் முதல் தற்போது சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி வரை சிவா ஜோடியாக  நடித்துள்ளனர் நடிக்க உள்ளனர்.

இவர் முதன்மை வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் என்றால் அது எதிர்நீச்சல் தான். தனுஷ் தயாரிப்பில் இந்த திரைப்படம் வெளியானது. இதில் பிரியா ஆனந்த் ஹீரோயினாக நடித்திருப்பார். இரண்டாவது ஹீரோயினாக நடிக்க பலரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதையும் படியுங்களேன் – அடுத்த ஏப்ரல் என்னோடது… வீடியோ வெளியிட்டு கோலிவுட்டை அதிர வைத்த தனுஷ்…

அந்த கதாபாத்திரம் இரண்டாம் நாயகி கதாபாத்திரம் என்பதால் பலரும் மறுப்பு தெரிவித்து வந்தனராம். ஒரு கட்டத்தில் சிட்டிசன் படத்தில் அஜித்துக்கு ஹீரோயினாக நடித்திருந்த வசுந்தரா தாஸ் அவர்களை படக்குழு அணுகியதாம். ஆனால் கதையை கேட்ட அவர் இதில் இரண்டாவது ஹீரோ நடிக்க மறுத்துவிட்டாராம். அதன் பிறகு அந்த முக்கியமான இரண்டாம் ஹீரோயினனாக நந்திதா ஸ்வேதா இந்த படத்தில் நடித்து இருப்பார்.

நந்திதா  அந்த கதாபாத்திரத்தில் மிகவும் கச்சிதமாக பொருந்தி போயிருப்பார். இந்த திரைப்படம் நல்ல வெற்றியை சிவகார்த்திகேயனுக்கு கொடுத்தது.

Manikandan
Published by
Manikandan