பெரிய திருமண மண்டபத்தில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை ஒன்று திரட்டி நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் சந்தித்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. மேலும், மிகப்பெரிய அளவிலான சிவகார்த்திகேயன் பேனர்கள் எல்லாம் அந்த மண்டபத்தை சுற்றி வைக்கப்பட்டு இருந்தன.
அதில், மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம் என சிவகார்த்திகேயன் புகைப்படங்களுடன் கூடிய பதாகைகள் ரசிகர்களை மட்டுமின்றி சினிமா வட்டாரத்தில் பலரையும் ஷாக் ஆக்கி உள்ளது.
இதையும் படிங்க: டஸ்க்கி குயின்!.. எட்டிப் பார்க்கும் அழகால் ரசிகர்களை ஏங்க வைக்கும் பொன்னியின் செல்வன் நடிகை!..
நடிகர் விஜய் இதே போலத்தான் தனது ரசிகர்களையும் விஜய் மக்கள் இயக்கத்தினரையும் தொடர்ந்து பிரியாணி போட்டும், அவர்களை சந்தித்தும் கவனித்து வந்தார். அதன் விளைவாக தற்போது கட்சியையும் ஆரம்பித்து அடுத்த தேர்தலில் போட்டியிட்டு உடனடியாக முதலமைச்சர் ஆகி விடலாம் என்கிற கனவிலும் இருந்து வருகிறார்.
இந்நிலையில், விஜய்யை தொடர்ந்து சிவகார்த்திகேயனும் சினிமாவை தொடர்ந்து அரசியலுக்கு வருவாரா? என்கிற கேள்வியை சோஷியல் மீடியாவில் பலரும் எழுப்பி உள்ளனர். நடிகர் விஜய்க்கு போட்டியாக சிவகார்த்திகேயன் சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் அடியெடுத்து வைப்பார் என்றும் ட்ரோல்கள் பறக்கின்றன.
இதையும் படிங்க: தன்னை கிண்டலடித்தவருக்கு நல்ல பாடம் புகட்டிய ரஜினி! சூப்பர் ஸ்டாருனா சும்மாவா?
நடிகர் சிவகார்த்திகேயன் செய்வது சரியான விஷயம் தான். விஜய்யை போல ரசிகர்களை அரவணைத்து சென்றால் தான் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனையை செய்ய முடியும். அஜித்தை போல விட்டு விட்டால் பெரிய அளவில் வசூலை ஈட்டவே முடியாது என ரசிகர்கள் தங்கள் கருத்துக்களைஇ பதிவிட்டு வருகின்றனர்.
அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ள அமரன் திரைப்படம் 100 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றால் தான் சிவகார்த்திகேயன் பெரிய நடிகராக மாறுவார் என்றும் கூறுகின்றனர்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…