×

நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் தொல்லை: கணவர் மீது சிவகார்த்திகேயன் பட நடிகை பரபரப்பு புகார்

சென்னை கிழக்கு முகப்பேர் பகுதியில் வசித்துவரும் துணை நடிகை(வயது 39) தனது முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டு தனது இரண்டு மகன்களுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
 

சென்னை கிழக்கு முகப்பேர் பகுதியில் வசித்துவரும் துணை நடிகை(வயது 39) தனது முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டு தனது இரண்டு மகன்களுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இவர்  செனாய் நகரில் அழகு நிலையம் மற்றும் யோகா பயிற்சி கிளினிக் நடத்தி வருகிறார். சின்னத்திரை  தொடர்களில் நடித்து வரும் இவர், சிவகார்த்திகேயனின் மான் கராத்தே படத்திலும் சிறு வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சரவணன் சுப்பிரமணி (வயது 42) என்பவருடன் துணை நடிகைக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சரவணன் சுப்பிரமணி தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறி நடிகையை திருமணம் செய்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் திருமங்கலம் அனைத்து காவல் நிலையத்தில் துணை நடிகை பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதில், தனது 2வது கணவரான சரவணன் சுப்பிரமணி எனது நகைகள், சொத்துக்கள், வருமானம் என அனைத்தையும் தொடர்ந்து பறித்து வந்தார். தனக்கு பல்வேறு வகையில் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வருகிறார். அவரது நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்து அவர்கள் முன்பு பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தார். இதனால் நான் அவரை விட்டு விலகி வாழ்ந்து வந்தேன். ஆனாலும் விடாமல் அடியாட்கள் மூலமாக தொடர்ந்து என்னையும் எனது மகன்களையும் மிரட்டி வருகிறார்.

சரவணன் சுப்பிரமணிக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி ஆகி 2 குழந்தைகள் உள்ளன. ஆனால் திருமணம் ஆகவில்லை என்று என்னை ஏமாற்றி அவரது முதல் மனைவி ஆரத்தியுடன் சேர்ந்து எனது சொத்துக்களை பறித்து எனக்கும் எனது மகன்களுக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்துவருகிறார். எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் அளித்தார்.

இதையடுத்து துணை நடிகை கொடுத்த புகாரின்பேரில் திருமங்கலம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News