Categories: Cinema News latest news throwback stories

சிவகார்த்திகேயனுக்கு அல்வா கொடுத்த நயன்தாரா.! மேடையில் வெளிப்பட்ட சீக்ரெட் இதோ…

தமிழ் சினிமாவில் முதலில் ஒரு படத்திற்கு ஒரு ஹீரோ பேசப்படுவார். சில நேரம் ஒப்பந்தம் கூட நடந்து விடும். ஆனால், கடைசி நேரத்தில் ஏதோ சில காரணங்களால் வேறு ஹீரோ மாற்றப்பட்டு, அந்த படம் வெளியாகிவிடும். இந்த சம்பவம் பல முன்னணி நாயகர்களுக்கே நடந்துள்ளது.

அப்படி ஒரு சம்பவம் தான் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் அட்லிக்கு இடையில் நடந்து உள்ளது. இவர்கள் இருவரும் சினிமாவில் வருவதற்கு முன்னர் இருந்தே நண்பர்கள். அட்லி இயக்கிய முதல் குறும்படத்தில் நடித்த ஹீரோ சிவகார்த்திகேயன் தான்.

அதன் பிறகு அட்லி முதல் திரைப்படம் இயக்க செல்லும் போது, சிவகார்த்திகேயனை தான் ஹீரோவாக நடிக்க வைப்பேன் என கூறி இருந்தாராம். அதாவது ராஜா ராணி கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜெய் கதாபாத்திரம் முதலில் சிவகார்த்திகேயனுக்கு பேசப்பட்டதாம்.

ஆனால், ஏனோ சில காரணங்களால் அந்த கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க முடியாமல் போனது. ஜெய் நடித்து அந்த கதாபாத்திரம் பேசப்பட்டது.

இதையும் படியுங்களேன் – இனி இந்தியன் 2 என்னோட கண்ட்ரோல்.! ஆனால்..? ஆண்டவர் படத்துக்கு செக் வைத்த உதயநிதி.!

இதுகுறித்து,  ஒரு விருது மேடையில் பேசிய சிவகார்த்திகேயன், ‘என்னை ஹீரோவாக ஆக்குகிறேன். நயன்தாராவுடன் ஜோடியாக்குகிறேன் என்று கூறினான். ஆனால், கடைசியில் அல்வா கொடுத்துவிட்டான். இந்த மச்சான் நயன்தாரா மேடம் கொடுத்து விட்டார்கள். என்று கூறி அல்வா தான் கடைசியில் கொடுத்தான்.’ என்று தனது நண்பன் அட்லீயை அருகில் வைத்துக்கொண்டே சிவகார்த்திகேயன் கலகலப்பாகப் பேசினார்.

ராஜா ராணி படத்தில் ஜெய் நடித்திருந்த கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இருந்தால், அது வேறு மாதிரியாக இருந்திருக்கும். உண்மையில் அந்த வெள்ளந்தியான கதாபாத்திரத்திற்கு ஜெய் மிக பொருத்தமாக இருந்தார் என்பது சினிமா விமர்சனங்களின் கருத்தாக உள்ளது.

Manikandan
Published by
Manikandan