Categories: Cinema News latest news

சிவகார்த்திகேயனை ஒரு நடிகராக அடையாளம் காட்டியதே இவர்தானாம்!.. சத்தியமா தனுஷ் இல்லங்க..

தமிழ் சினிமாவில் ஒரு முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இன்று தமிழ் நாடே விரும்பும் நடிகராக சிவகார்த்திகேயன் இருக்கிறார் என்றால் அதற்கு அவருடைய கடின உழைப்பும் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும்தான் காரணமாகும்.

ஆரம்பகாலங்களில் விஜய் தொலைக்காட்சியில் ஆங்கராக தன்னுடைய பணியை ஆரம்பித்து ரசிகர்களை கவர்ந்த சிவகார்த்திகேயன் விஜய் டிவியின் நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்தார். பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய சிவகார்த்திகேயனை பிடிக்காதவர்களே இல்லை என்றும் சொல்லுமளவிற்கு அதிக ரசிகர்களை அப்பவே தக்க வைத்துக் கொண்டார்.

அதன் மூலம் சிவகார்த்திகேயன் வெள்ளித்திரைக்கு வந்தார்.ஆனால் அவரை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் நடிகர் தனுஷ் என்று தான் பல பேருக்கு தெரியும். ஆனால் உண்மையிலேயே சிவகார்த்திகேயனுக்குள் ஒரு நடிகன் என்ற ஒரு கலைஞன் இருக்கிறான் என்பதை கண்டறிந்தவர் ஆர்.டி.ராஜா.

இவர் விஜய் டிவியில் ஒரு முக்கியமான அங்கமாக இருந்தவர். அவர்தான் சிவகார்த்திகேயனை சினிமாவிற்குள் வருவதற்கு ஒரு உந்து கோலாக இருந்தவராம். ஒரு நடிகனுக்கு உண்டான அத்தனை அம்சங்களையும் சிவகார்த்திகேயனிடம் கண்டறிந்து அதற்கேற்றாற் போல அவரை செதுக்கியவர் இந்த ஆர்.டி.ராஜாதானாம்.

ஒரு மாஸ், ஒரு கெத்து என ஒரு நடிகன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை சிவகார்த்திகேயனிடம் விதைத்திருக்கிறார். சொல்லப்போனால் ஆரம்பகாலத்தில் சிவகார்த்திகேயனுக்கு பக்க பலமாக இருந்தவரான தனுஷை சிவகார்த்திகேயனிடம் இருந்து பிரித்தவரும் இவர்தான் என சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க : மணிரத்னம் சொல்லும் முன்பே ரகுமான் இசையமைத்த பாடல்!.. ரோஜா படத்தில் நடந்த மேஜிக்!…

இப்படியே ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக சிவகார்த்திகேயன் வளர்ந்த பிறகு தனக்கு ஒரு துடுப்பு மாதிரி இருந்த ஆர்.டி.ராஜாவை சைலண்டாக கழட்டி விட்டாராம் சிவகார்த்திகேயன். இந்த சுவாரஸ்ய தகவலை வலைப்பேச்சு அந்தனன் கூறினார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini