1. Home
  2. Latest News

Sivakarthikeyan: நீயெல்லாம் ஹீரோவாக முடியாதுனு சொன்னவர மேடையில் கலாய்த்த சிவகார்த்திகேயன்

sivakarthikeyan
சிவா எதுக்கு உங்களுக்கு இந்த வேண்டாத வேலை, உங்களுக்கு டைமிங் நன்றாக வருகிறது. அதை பயன்படுத்தி காமெடி ரோல் ஏதாவது ட்ரை பண்ணுங்க

சிம்புவை வைத்து முதன் முதலில் நெல்சன் எடுக்க நினைத்த படம் வேட்டை மன்னன். ஆனால் அந்தப் படம் அப்படியே கைவிடப்பட்டது. அந்தப் படத்தில் அசிஸ்டன்ட் உதவியாளராக பணிபுரிந்தாராம் சிவகார்த்திகேயன். அதோடு அந்தப் படத்திலும் ஒரு காமெடி ரோலிலும் நடிப்பதாக இருந்தாராம். அந்த படத்தின் போது நெல்சன் கதை சொல்ல சொல்ல சிவகார்த்திகேயன் எழுதிக் கொண்டிருப்பாராம். அதனைத் தொடர்ந்து நெல்சன் அலுவலகம் தனியாக அமைக்க இயக்குனர் அருண்ராஜ் காமராஜா இவர்களுடன் இணைந்து இருக்கிறார்.

அவரை தொடர்ந்து டான்ஸ் மாஸ்டர் சதீஷும் இவர்களுடன் சேர்ந்து கொண்டாராம். அதிலிருந்து தான் இவர்கள் நால்வரும் நண்பர்களாக வலம் வந்திருக்கின்றனர். இன்று ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசிய சிவகார்த்திகேயன் இந்த பழைய நினைவுகளை எல்லாம் பகிர்ந்து இருக்கிறார். பார்க்கிங் படத்தை சுதன் என்பவருடன் இணைந்து கே எஸ் சினிஷ் என்பவரும் சேர்ந்து தயாரித்தார். அந்த சினிஸ் இன்று தனியாக ஒரு புரொடக்சன் கம்பெனியை ஆரம்பித்து இருக்கிறார். அந்த விழாவிற்கு தான் சிவகார்த்திகேயன் உட்பட அனைத்து பிரபலங்களும் இன்று கலந்து கொண்டனர்.

அப்போது சினிஷை பற்றி ஒரு பழைய பிளாஷ்பேக் ஒன்றை சிவகார்த்திகேயன் பகிர்ந்து கொண்டார். நெல்சனுடன் அந்த அலுவலகத்தில் இருக்கும் பொழுது சினிஷ் ஒரு சமயம் சிவகார்த்திகேயனிடம்,  ‘நீ என்ன ஆக வேண்டும்னு ஆசைப்படுகிறாய்’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு சிவகார்த்திகேயன் கிண்டலாக  ‘நான் ஹீரோவாக வேண்டும்’ என்று சொல்லி இருக்கிறார். அதுக்கு சினிஷ் ‘சிவா எதுக்கு உங்களுக்கு இந்த வேண்டாத வேலை, உங்களுக்கு டைமிங் நன்றாக வருகிறது. அதை பயன்படுத்தி காமெடி ரோல் ஏதாவது ட்ரை பண்ணுங்க’ என்று சொல்லி இருக்கிறார்.

அதற்கு சிவா  ‘ஏன் நான் ஹீரோவாக ஆசைப்படக் கூடாதா’ என கேட்டிருக்கிறார்.  ‘தேவையில்லாத வேலை பாக்குறீங்க நீங்க’ என்ற சொல்லிவிட்டு சினிஷ் சென்று விட்டாராம். இது அப்படியே முடிந்துவிடும் என்ற பார்த்தால் மதிய இடைவேளையிலும் சினிஷ் சிவகார்த்திகேயனிடம்  ‘சிவா ஹீரோ நினைப்பு எல்லாம் வேண்டாம். இது உங்களுக்கு செட் ஆகாது, சதீஷ் ஹீரோவா நடிக்கலாம். அவருக்கு வேண்டுமென்றால் நீங்கள் காமெடியனா நடிக்கலாம்’ என சொல்லி இருக்கிறார்.

sinish

ஆனால் இந்த சம்பவத்தை சிவகார்த்திகேயன் அப்படியே மறந்து விட்டாராம் .சிவகார்த்திகேயன் ஹீரோவாக பல படங்களில் நடித்து நான்கு வருடங்கள் ஆன பிறகு ஒருநாள் சிவகார்த்திகேயனிடம் வந்து  ‘அன்னைக்கு பேசுனத நீங்க மனசுல எதுவும் வச்சிக்காதீங்க’ என சொல்லி இருக்கிறார் சினிஷ். அந்த காலகட்டத்தில் சிவகார்த்திகேயனும் மிகவும் பிசியாக சினிஷும் சிவகார்த்திகேயனும் பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஒரு வேளை அன்று நம்ம பேசியதை மனதில் வைத்து தான் சிவகார்த்திகேயன் நம்மிடம் பேசவில்லையோ என சினிஷ் நினைத்துக் கொண்டாராம். ஆனால் அப்படி எல்லாம் கிடையாது என இந்த சம்பவத்தை அந்த விழா மேடையில் மிகவும் கிண்டலாக பேசி அரங்கத்தையே சிரிக்க வைத்தார் சிவகார்த்திகேயன்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.