சூர்யா வழியில் எஸ்கே...தாய்கிழவி இயக்குனருக்கு கார் பரிசு
ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் தாய்கிழவி. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவந்த இந்த படத்தை சிவகுமார் முருகேசன் இயக்கியிருந்தார். படம் வெளியாகி தமிழகமெங்கும் பட்டையை கிளப்பியது. ரூ 10 கோடியில் தயாரான இப்படம் 75 நாட்கள் வரை ஓடி 80 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. இந்த ஆண்டில் அதிக வசூல் சாதனை செய்த படங்களில் தாய்கிழவியும் உண்டு. படத்தின் வெற்றியை பார்த்த சிவகார்த்திகேயன் தனது அடுத்த படமான சேயோன் படத்தினை சிவக்குமார் முருகேசனிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தாய்கிழவி பட இயக்குனர் சிவகுமார் முருகேசனுக்கு விலை உயர்ந்த கார் ஒன்றினை பரிசாக வழங்கியுள்ளார். விழாவில் தாய்கிழவி படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
நடிகர் சூர்யா கருப்பு பட வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழுவின் முக்கிய நபர்களுக்கு கார் ஒன்றினை பரிசான வழங்கினார். அந்த வழியில் தற்போது சிவகார்த்திகேயனும் தற்போது காரினை பரிசக கொடுத்துள்ளார்.
