Connect with us
surya-sivakarthikeyan

Cinema News

சிவகார்த்திகேயனை ஹீரோவாக்குனது நான் தான்.! ஆனா அது அவருக்கே தெரியாது.!

நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து அதன் பின்னர் படிப்படியாக சினிமாவிற்குள் காமெடியன் வேடத்தில் நுழைந்து அதன் பின்னர் ஹீரோவாக மாறி, தற்போது முன்னணி கதாநாயகர்கள் பட்டியலில் உள்ளார்.

அவர் முதலில் தனுஷ் நடித்த 3 திரைப்படத்தில் காமெடியன் வேடத்தில் நடித்திருப்பார். அதன்பிறகு மனம் கொத்தி பறவை எனும் திரைப்படத்தில் நடித்து இருப்பார். அந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

அந்த படத்திற்காக இயக்குனர் எழில் புதுமுக நடிகரை தேடிக் கொண்டிருந்தாராம். அப்போது பாடலாசிரியர் யுகபாரதி மற்றும் இசையமைப்பாளர் இமான் ஆகியோர் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை போனில் பார்த்துள்ளனர்.

அந்த சமயம் எழில் தான் ஒரு புதுமுக நடிகரை தேடி கொண்டு வருகிறேன். என்று கூற, உடனே யுகபாரதி இந்த பையனை முயற்சி செய்து பாருங்களேன் என்று சிவகார்த்திகேயனின் வீடியோக்களை காண்பித்துள்ளார்.

இதையும் படியுங்களேன் – சூடம் ஏத்தி இறுதி மரியாதை செலுத்தி சர்ச்சையில் சிக்கிய தளபதி விஜய்.!

இயக்குனர்  எழிலும் அதனை பார்த்துவிட்டு உடனே சிவகார்த்திகேயனை அந்த படத்தில் நடிக்க முயற்சி மேற்கொண்டு அவரை ஹீரோவாகிவிட்டாராம். இதனை பாடலாசிரியர் யுகபாரதி ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். மேலும் இந்த விஷயம் சிவகார்த்திகேயனுக்கு கூட தெரியுமா தெரியாதா என தெரியவில்லை என கூறியிருப்பார்.

அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கி சட்டை என ஹிட் கொடுத்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார்  சிவகார்த்திகேயன்.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top