
Cinema News
கவுண்டமணி சிவகார்த்திகேயன் கூட்டணியில் அடுத்த படம்!.. மாஸ் அப்டேட்டா இருக்கே…
Published on
By
விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து மெரினா, மனம் கொத்தி பறவை போன்ற திரைப்படங்கள் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் சிவகார்த்திகேயன்.விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்தபோதே அவர் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருந்தார். எனவே அவர் சினிமாவிற்கு வருவதற்கு அதுவே பெரும் உதவியாக இருந்தது.
தொடர்ந்து சினிமாவிற்கு வந்தவுடன் அவருக்கு மனம் கொத்தி பறவை எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து வரிசையாக காமெடி திரைப்படங்களாக நடிக்க தொடங்கினார். அப்பொழுது நடிகர் தனுஷ் சிவகார்த்திகேயனுக்கு உதவியாக இருந்தார்.
இதனை தொடர்ந்து வரிசையாகஹிட் கொடுக்க ஆரம்பித்த சிவகார்த்திகேயன் தற்சமயம் தமிழில் சிம்பு, விஜய் சேதுபதிக்கு நிகரான ஒரு நடிகராக மாறியுள்ளார். தற்சமயம் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.
அடுத்து ஒரு மாஸ் கூட்டணி:
சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டம் முதலே ஒரு முறையாவது கவுண்டமணியுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற ஆசை அவருக்கு இருந்து வருகிறது. ஒரு நிகழ்வில் பேசும்போது கூட கவுண்டமணி படத்தில் என்னை கலாய்க்க வேண்டும், நான் செந்தில் போல அவரிடம் கலாய் வாங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
goundamani
இது குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் கூறும்பொழுது கவுண்டமணிக்கும் சிவகார்த்திகேயன் மீது ஒரு ஈடுபாடு உண்டு. சிவகார்த்திகேயனின் காமெடியை கவுண்டமணியும் ரசித்து பார்ப்பதுண்டு. வெகு நாட்களாக கவுண்டமணி சினிமாவில் நடிக்காமல் இருக்கிறார், அவருக்கு நடிப்பதில் விருப்பமில்லை என்றும் கூறியுள்ளார்.
ஆனால் சிவகார்த்திகேயனுடன் நடிப்பதற்கு கவுண்டமணி ஆர்வமாக உள்ளார். எனவே வெகு சீக்கிரத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் கவுண்டமணி கூட்டணியில் அடுத்து ஒரு படத்தை எதிர்பார்க்கலாம். அதற்கான பேச்சுவார்த்தை தற்சமயம் சென்றுக்கொண்டுள்ளது, என செய்யாறு பாலு கூறியுள்ளார்.
இதையும் படிங்க: விக்ரம் படப்பிடிப்பில் முதல் நாள் முதல் ஷாட்டில் லோகேஷ் கனகராஜூக்கு கமல் தந்த அதிர்ச்சி
TVK Vijay: நேற்று ஒரு பெரிய துயர சம்பவம் தமிழ் நாட்டையே உலுக்கியது. தவெக தலைவர் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணமாக ஒவ்வொரு...
ரங்கராஜ் முகத்திரை கிழிப்பு : மாதம்பட்டி ரங்கராஜ் சினிமா ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்டா என்பவரை ஆசை வார்தத்தை கூறி ஏமாற்றி...
தீயாய் வேலை செய்யும் விஜய் : விஜய் பேச்சில் ஏற்பட்ட தடுமாற்றம் : விஜயின் பேச்சு பல விமர்சனங்களை சந்தித்தாலும் இன்று...
சினிமா நடிகர் பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜி மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூத்த பத்திரிக்கையாளர் சேகுவேரா கூறி...
Vijay TVK: திருச்சியில் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்த விஜய் இன்று நாமக்கல் , கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த...