Categories: Cinema News latest news

இப்படி பண்ணிடீங்களே.! மன வருத்தத்தில் சிவகார்த்திகேயன்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது இரண்டாம் அலையிலிருந்து தியேட்டர் உணர்வினை காப்பாற்றியது டாக்டர் திரைப்படத்திற்கு முக்கிய பங்கு உண்டு எனும் அளவிற்கு வெற்றியை அடைந்தது. மேலும், சிவகார்த்திகேயன் முதல் 100 கோடி திரைப்படமாகவும் அமைந்தது.

இதனை அடுத்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவர் நடிப்பில் அடுத்ததாக உருவாகியுள்ள ‘டான்’ திரைப்படம் விரைவில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டிருந்தது. வரும் பிப்ரவரி 17ஆம் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்த நாள். அதனை முன்னிட்டு பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டும் அப்படத்தை வெளியிட படக்குழு தயார் செய்து வைத்திருந்தது படக்குழு.

sivakarthikeyan

ஆனால், தற்போது தமிழகத்தில் பிப்ரவரி 17 -ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால் புது படங்களை ரிலீஸ் செய்ய இன்னும் இரண்டு வாரங்களுக்கு எந்த விநியோகஸ்தர்களும் தயாராக இல்லை. அதன் காரணமாக படத்தின் ரிலீஸ் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்களேன்- துவண்டுபோன ஹாரிஸ்.! கை கொடுத்த சிவகார்த்திகேயன்.! ‘காரசார’ பின்னணி.!

 

பிப்ரவரி 17ஆம் தேதி தான் படத்திலிருந்து முக்கிய அப்டேட் ஏதாவது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது அனேகமாக படத்தின் டிரைலர் அல்லது டீசர் வெளியாகலாம். அந்த வகையில் இன்று காலையில் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ மூலம்  மார்ச் 25ஆம் தேதி திரையரங்குகளில் டான் திரைப்படம் வெளியாகிறது என்று தெரிவித்தார்.

Manikandan
Published by
Manikandan