லிப்லாக் சீனில் இதுவரை சிவகார்த்திகேயன் நடிக்காததுக்கு காரணம்.. தனுஷ் மானம் போச்சே
தனுஷ் சிவகார்த்திகேயன்:
தமிழ் சினிமாவில் இப்போது ரஜினி, கமல், அஜித் , விஜய் இவர்கள் வரிசையில் தனுஷ், சிவகார்த்திகேயன் இவர்கள் தான் இருந்து வருகிறார்கள். பேக் டு பேக் ஹிட் கொடுத்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக சுதா கொங்கரா படத்தில் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் தனுஷும் தன்னுடைய லைன் அப்பை அதிகரித்துக் கொண்டே போகிறார். அடுத்த இரண்டு வருடங்கள் மிகவும் பிஸியாக இருக்கும் நடிகர்கள் என்றால் அது தனுஷும் சிவகார்த்திகேயனும்தான்.
ஆனால் சினிமாவில் சிவகார்த்திகேயன் வருவதற்கு ஒருவகையில் தனுஷும் காரணமாக இருந்திருக்கிறார் என்று நம் அனைவருக்கும் தெரியும். சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த சிவகார்த்திகேயனின் ஹுயூமர் ரசிக்கும் படியாக இருந்ததனால் படத்தில் நடிக்க அழைத்து வந்தார் தனுஷ். அதன் பிறகு தன்னுடைய அடுத்தடுத்த முயற்சியால் இன்று அமரனாக அனைவர் மனதிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
நல்ல நண்பர்கள்:
ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் நல்ல நண்பர்களாக இருந்தனர். எந்தவொரு விழாவானாலும் நண்பர்கள் பார்ட்டியானாலும் இருவரும் ஒன்றாக செல்வது வழக்கமாக இருந்தது. ஆனால் இடையில் இருவருக்கும் ஏதோ ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதனால்தான் இருவரையும் ஒன்றாக பார்க்கமுடியவில்லை என்றும் பல வதந்திகள் வந்தன.
ஆனால் சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்திற்கு சிவகார்த்திகேயனும் தனுஷும் கலந்து கொண்டு தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டனர். ஒரு கட்டத்தில் இருவரும் சேர்ந்து பார்ட்டியில் நடனமும் ஆடினர். அந்த வீடியோ சோசியல் மீடியாக்களில் வைரலானது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் இருவரும் சேர்ந்து ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்த பழைய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
லிப் லாக்கிற்கு நோ:
அதில் நீங்க லிப் லாக் சீனில் நடித்தால் எந்த நடிகையுடன் நடிப்பீர்கள் என்ற கேள்வி சிவகார்த்திகேயன் முன் வைக்கப்பட்டது. அதற்கு அவர் ‘ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க என் வீட்டில் உள்ளவர்களுக்கு பிடிக்கவே இல்லை. அதனால் படங்களில் நடிகையுடன் நெருக்கமாகவோ இந்த மாதிரி முத்தக் காட்சிகளிலோ நடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்துதான் நடிக்கவே வந்தேன். அதனால் லிப் லாக் சீனில் நடிக்கவே மாட்டேன்.
ஒரு வேளை கதைக்கு தேவைப்பட்டாலும் இயக்குனருடன் போராடி அதை மாற்றிவிடுவேன்’ என கூறியிருந்தார். இதை கேட்டதும் அருகில் இருந்த தனுஷ் ‘அப்போ நானெல்லாம் ரொம்ப கெட்டவனா தெரிவேனோ’ என்று கமெண்ட் அடித்தார். இந்த வீடியோதான் தீயாய் பரவி வருகிறது.