×

தலைக்கு மிஞ்சிய கடன்... சிவாவிடம் தொக்கா மாட்டிய சன்பிக்சர்ஸ்

கடனை அடைத்தே தீர வேண்டும் என்கிற நிலையில் இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு தொக்காக 5 பட டீலுடன் வந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
 
doctor_censor

சன் பிக்சர்ஸ் நிறுவன தயாரிப்பில் 5 படங்களில் நடிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறாராம் சிவகார்த்திகேயன். படம் ஒன்றுக்கு ரூ. 15 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம்.

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து அசுர வளர்ச்சி அடைந்து முன்னணி நடிகராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். அவர் படங்களில் நடிப்பதுடன் தயாரிக்கவும் செய்கிறார். அவர் நடித்த படங்களில் சிலவற்றின் பட்ஜெட் எகிற தயாரிப்பாளரின் கடனை தன் கடனாக ஏற்றுக் கொண்டார் சிவகார்த்திகேயன். இதனால் அவருக்கு பல கோடி கடன் இருக்கிறது.

கடனை அடைத்தே தீர வேண்டும் என்கிற நிலையில் இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு தொக்காக 5 பட டீலுடன் வந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இரண்டு ஆண்டுகளில் எங்கள் தயாரிப்பில் 5 படங்களில் நடிக்கிறீர்களா என்று சன் டிவி கேட்க, தற்போதிருக்கும் சூழலை மனதில் வைத்து சிவகார்த்திகேயனும் ஓகே சொல்லிவிட்டாராம். ஒரு படத்திற்கு ரூ. 15 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம். ஆக ரூ. 75 கோடி சம்பளம் கிடைக்கும். அதில் ரூ. 70 கோடி கடனுக்கே போய்விடும் என்று கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயனை இயக்கப் போகும் அந்த 5 இயக்குநர்கள் யார், யார் என்பது எல்லாம் இதுவரை தெரியவில்லை. இதற்கிடையே நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தை கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி தியேட்டரில் வெளியிடுவதாக அறிவித்தார்கள். ஆனால் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நேரமாக இருந்ததால் ரிலீஸை ரம்ஜானுக்கு ஒத்தி வைத்தார்கள்.

அதற்குள் கொரோனா வைரஸ் பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுக்கவே ரம்ஜானுக்கும் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. இந்நிலையில் டாக்டரை டிஸ்னி ஹாட்ஸ்டாரிடம் விற்க முடிவு செய்துள்ளனர். ஆனால் அதிலும் ஒரு சிக்கல்.

டாக்டர் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை முன்பே சன் டிவி வாங்கிவிட்டது. இந்நிலையில் சாட்டிலைட் உரிமத்தோடு படத்தை கேட்கிறதாம் டிஸ்னி ஹாட்ஸ்டார். வாங்கிய உரிமத்தை விட்டுக் கொடுக்க சன் டிவி தயாராக இல்லையாம். இந்த பிரச்சனையை தீர்க்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் தான் சன் டிவியுடன் 5 பட டீல் போட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

From around the web

Trending Videos

Tamilnadu News