மாவீரன் 2-வுக்கு சிவகார்த்திகேயன் நோ சொன்னால்?... மாஸ்டர் ப்ளான் போட்ட மடோன்!
Jul 28, 2026, 16:10 IST
சிவகார்த்திகேயன் நடிப்பில் ஜெட் ஸ்பீடில் ரெடியாகிக் கொண்டிருக்கும் படம் 'சேயோன்'. இதை சிவகுமார் முருகேசன் இயக்கி கொண்டிருக்கிறார்.
இதை முடித்ததும் 'பார்க்கிங்' இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் படத்தில் நடிக்க ஆல்ரெடி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. அதன் பிறகு 'மாவீரன்' படத்தின் பார்ட் 2-வுக்காக மீண்டும் இயக்குநர் மடோன் அஷ்வினுடன் கைகோர்க்கிறார் சிவா.
மடோன் ஸ்கிரிப்ட் வொர்க்கை முடித்து விட்டாராம், 'சேயோன்' ஷூட்டிங் முடிந்ததும் சிவாவிடம் சொல்ல வெயிட்டிங்காம்.
ஒருவேளை அது அவருக்கு பிடிக்காமல் நோ சொல்லி விட்டால், உடனே அவரிடம் சொல்ல இன்னொரு புதிய கதையையும் டெவலப் பண்ணி வருகிறாராம் மடோன் அஷ்வின்.
