Categories: Cinema News latest news

எல்லா கோட்டையும் அழிங்க… மீண்டும் முதலில் இருந்து படமாக்கும் சிவகார்த்திகேயன் படக்குழு… இது என்னடா கொடுமை!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று வெளிவந்த திரைப்படம் “பிரின்ஸ்”. இத்திரைப்படம் ரசிகர்களை அவ்வளவாக ஈர்க்கவில்லை. சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் என்றாலே காமெடி காட்சிகள் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும். ஆனால் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் பார்வையாளர்களின் பொறுமையை சோதித்ததாக பல விமர்சனங்கள் எழுந்தன.

Prince

இத்திரைப்படத்தை தொடர்ந்து தற்போது “மாவீரன்” திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை மடோன்னே அஸ்வின் இயக்கி வருகிறார். மடோன்னே அஸ்வின் இதற்கு முன் இயக்கிய “மண்டேலா” திரைப்படம் தேசிய விருது பெற்ற திரைப்படமாக அமைந்தது. மேலும் “மண்டேலா” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது.

இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு “மாவீரன்” திரைப்படத்தின் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனுக்கும் இயக்குனருக்கும் ஒரு சிறு மனஸ்தாபம் ஏற்பட்டதாகவும் ஆதலால் அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் வெளிவந்தது.

Maaveeran

ஆனால் அந்த தகவல் உண்மை இல்லை எனவும், மழை காரணமாகத்தான் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்ததாகவும் இயக்குனர் மடோன்னே அஸ்வின் தெரிவித்திருந்தார். அதன் பின் சில நாட்கள் கழித்து “மாவீரன்” திரைப்படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியது.

இந்த நிலையில் தற்போது “மாவீரன்” திரைப்படம் குறித்து ஒரு அதிர்ச்சிகரமான தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்து இது வரை படமாக்கப்பட்ட அனைத்து காட்சிகளும் படக்குழுவினருக்கு திருப்தியை அளிக்கவில்லையாம். ஆதலால் படக்குழுவினர் வேறு ஒரு கதையை வைத்து மீண்டும் “மாவீரன்” திரைப்படத்தின் படப்பிடிப்பை முதலில் இருந்து படமாக்கவுள்ளதாக ஒரு செய்தி வந்துள்ளது.

Arun Prasad
Published by
Arun Prasad