ரஜினியின் 'தர்மன்'-க்கு நோ சொன்ன விஜய் பட ஹீரோயின்... யெஸ் சொல்வாரா சிவகார்த்திகேயன் பட ஹீரோயின்?
கோலிவுட்டின் 'சூப்பர் ஸ்டார்' நடித்து கொண்டிருக்கும் புது படம் தான் 'தர்மன்'. இதில் தலைவர் டாக்டர் ரோலில் வலம் வரப்போகிறார்.
அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் ராஷி கண்ணா, யோகி பாபு நடிக்கிறார்கள். கமல்ஹாசன் தயாரிக்கும் இந்த படத்தை 'ஓ மை கடவுளே' புகழ் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கிக் கொண்டிருக்கிறார்.
ஆல்ரெடி இதன் ஷூட்டிங் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், இப்படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க விஜய்யின் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' ஹீரோயின் மீனாக்ஷி சவுத்ரியிடம் கேட்கப்பட்டது.

தற்போது, அவர் நோ சொல்லிவிட்டதாகவும், அவருக்கு பதிலாக நடிகை ருக்மிணி வசந்திடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. ருக்மிணி வசந்த் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
