ரஜினிக்கு ஜோடியாக நடிக்கப்போகிறாரா சிவகார்த்திகேயன் பட ஹீரோயின்?
Aug 6, 2026, 22:51 IST
தெலுங்கில் 'ஸ்கந்தா, பகவந்த் கேசரி' போன்ற பல படங்களில் நடித்தவர் நடிகை ஶ்ரீலீலா. இவர் தமிழில் நம்ம சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'பராசக்தி' படத்தில் நடித்தார்.
இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆன இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்போது தனுஷ் - இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகும் 'ஓம்' படத்தில் ஶ்ரீலீலா நடித்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், ஶ்ரீலீலா தமிழ் சினிமாவின் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகியுள்ளதாக டோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது.

ஆனால், இது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'தர்மன்' படத்துக்கா? அல்லது நெல்சன் இயக்கத்தில் ரஜினி - கமல் இருவரும் இணைந்து நடிக்கும் 'KHxRK Reunion' படத்துக்கா? என்று வெயிட் பண்ணி தான் பார்க்க வேண்டும்.
