×

விஜய் போனால் என்ன? நான் இருக்கேன் -முருகதாஸுக்கு கை கொடுக்கும் சிவகார்த்திகேயன்

மாஸ்டர் படத்தினை அடுத்து விஜய் சன் பிச்சர்ஸ் நிறுவனத்திற்காக ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக இருந்தது. இந்த கூட்டணிக்கு ஒரு சிலர் ஆதரவும், ஒரு சிலர் எதிர்ப்பும் கூறிவந்தனர். காரணம் முருகதாஸ் இயக்கிய கடைசி திரைப்படங்கள்
 

மாஸ்டர் படத்தினை அடுத்து விஜய் சன் பிச்சர்ஸ் நிறுவனத்திற்காக ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக இருந்தது. இந்த கூட்டணிக்கு ஒரு சிலர் ஆதரவும், ஒரு சிலர் எதிர்ப்பும் கூறிவந்தனர். காரணம் முருகதாஸ் இயக்கிய கடைசி திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்ததே.

இந்த நிலையில் சில பிரச்சனைகள் காரணமாக விஜய் படத்திலிருந்து முருகதாஸ் விலகினார். இதற்கு விஜய் தரப்பிலிருந்து எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.இதைத் தொடந்து விஜய் படத்தை கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் இயக்குவதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளிய்டானது நாம் அறிந்ததே.


இந்த சூழ்நிலையில் முருகதாஸ் நிச்சயம் ஒரு வெற்றி படத்தை கொடுத்தாக வேண்டிய சூழலில் உள்ளார். இதனால் அடுத்து யாரை இயக்குவார் என்று கோலிவுட்டில் அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். நெட்பிளிக்ஸ்க்கு ஒரு படத்தை இயக்குவார் என் கூறப்பட்டது. ஆனால் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சமீபத்தில் முருகதாஸ் நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே முருகதாஸ் இயக்கத்தில் எப்படியாவது ஒரு படத்தில் நடித்துவிட வேண்டும் என்று சிவகார்த்திகேயன் மேடைக்கு மேடை கூறிவருகிறார். எனவே இந்த கூட்டணி கைகூட வய்ப்பிருந்ததாகவே தெரிகிறது.  
 

From around the web

Trending Videos

Tamilnadu News