Categories: Cinema News latest news

ஏதேதோ செய்து ஏடாகூடமாய் மாட்டிக்கொண்ட சிவா.! விழிபிதுங்கி நிற்கும் அவலம்.!

சிலர் சொல்லி கேட்பார்கள், சிலர் பட்டு அனுபவித்து தான் தெரிந்து கொள்வார்கள். முன்னணி உச்ச நடிகர்களாக இருக்கும் ரஜினி, விஜய், அஜித் கூட இதுவரையில் சொந்தமாக பட தயாரிப்புகளில் தீவிரமாக ஈடுபட்டதில்லை.ரஜினி சில படங்களை நண்பர்கள் மூலம் தயாரித்ததாக கூறப்பட்டாலும், அவரும் தொடர்ந்து அதனை செய்ததில்லை.

ஆனால், வளர்ந்து வரும் நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன் போன்றோர் அதனை செய்து சில நேரம் சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர். அப்படித்தான் சிவகார்த்திகேயன் சொந்த படம் எடுத்து அடிபட்டு கடன்கள் அதிகமாகி தற்போது பல கம்பெனிகளிடம்  அட்வான்ஸ் வாங்கி வைத்துள்ளாராம்.

அதன் காரணாமாக தான் சன் பிக்ச்சர்ஸ்க்கு 2க்கு மேற்பட்ட திரைப்படம், கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனத்திற்கு ஒரு படம், தெலுங்கு பட நிறுவனத்திற்கு ஒரு படம், ஐசரி கணேஷ் தயாரிக்கும் படம் , சத்ய ஜோதி நிறுவனத்திற்கு ஒரு படம் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறதாம்.

இதையும் படியுங்களேன் – பீஸ்ட் விஜயின் புகைப்படம் லீக்கானது எப்படி.?! துப்பறிந்த படக்குழுவிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!

இத்தனை படங்களுக்கும் அட்வான்ஸ் வேறு சிவா வாங்கியதாக கூறப்படுகிறது. அட்வான்ஸ் கொடுத்த நபர்கள் எல்லாம் கால்ஷீட் கேட்டு நச்சரித்து வருகிறார்களாம். தற்போது அடுத்து எந்த படத்திற்கு கால்சீட் கொடுப்பது என சிவகார்த்திகேயன் குழம்பி நிற்கிறாராம்.

அந்த படத்திற்கு ஹீரோயின் கிடைக்கவில்லை, இந்த படத்திற்கு ப்ரீ ப்ரொடெக்சன் பணிகள் நடைபெறவில்லை. இந்த படத்தின் கதை இன்னும் முடிவாகவில்லை என ஏதேதோ காரணங்களால் ஷூட்டிங் தள்ளி போய்க்கொண்டே வருகிறதாம்.

Manikandan
Published by
Manikandan