வெங்கட் பிரபுவுக்கு கல்தா... அடுத்த பட இயக்குனரை லாக் செய்த எஸ்கே
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது மாயோன் என்ற படத்தில் நடித்து வருகிறார். தாய் கிழவி வெற்றி படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இப்படத்தை இயக்கி வருகிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் அடுத்து யார் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர்.
முன்ன்னதாக கோட் வெற்றிபடத்தை இயக்கிய வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனிடம் கதை ஒன்று சொன்னார். அந்த கதை எஸ்கேவிற்கு பிடிக்கவே சத்யஜோதி பிலிம்ஸ் அந்த படத்தை தயாரிக்க முன்வந்தது. ஆனால் எதிர்பாராவிதமாக மதராஸி தோல்வி மற்றும் வெங்கட் பிர்பு சொன்ன பட்ஜெட் காரணமாக அந்த படத்தை தயாரிக்க சத்யஜோதி நிறுவனம் தயங்கியது. பட்ஜெட்டை குறைக்க சொல்ல வேறு வழியில்லாமல் அந்த பணிகளில் ஈடுபட்டார் வெங்கட். ஆனால் ஒரு கட்டத்தில் வெங்கட் பிரவை தவிர்த்தார் எஸ்கே.
இந்த நிலையில் எஸ்கேவின் அடுத்த படத்தை பார்க்கிங் வெற்றிபட இய்க்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக கூறப்படுகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறார்கள். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று தெரிகிறது. இதன் மூலம் எஸ்கே வின் அடுத்த படத்தை வெங்கட் பிரபு இயக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
