SK 26: கல்கி, அவென்சர்ஸ் ரேஞ்சுல இருக்கும் போலயே.. SKவை தயார்படுத்தும் வெங்கட் பிரபு
சிவகார்த்திகேயன்;
பராசக்தி ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கின்றார் சிவகார்த்திகேயன். அந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. அதன் பிறகு படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிக விரைவில் துவங்க இருக்கின்றது .டப்பிங் வேலைகளை எல்லாம் முடிந்து விட்டார்கள். ஏற்கனவே ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு பெரும் அங்கீகாரம் கிடைத்தது. அதற்கு அடுத்தபடியாக சுதா கொங்கரா இயக்கத்தில் தயாராகி இருக்கும் பராசக்தி திரைப்படமும் சிவகார்த்திகேயனை நிச்சயமாக அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ப்ராஜக்ட்:
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் பராசக்தி திரைப்படத்திற்கு பிறகு அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தான் நடிக்கப் போகிறார் என்று கூறப்படுகிறது. வெங்கட் பிரபு சிவகார்த்திகேயன் இணையும் திரைப்படம் பற்றிய ஒரு அப்டேட் இன்று வெளியாகி இருக்கிறது .இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கப் போகிறார்கள். ஹாலிவுட் படம் அளவுக்கு பெரிய விஎஃப்எக்ஸ் டெக்னாலஜி எல்லாம் இந்த படத்தில் பயன்படுத்த போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
லோலா விஎஃப்எக்ஸ்:
குறிப்பாக லோலா விஎஃப்எக்ஸ் குழு சமீபத்தில் சிவகார்த்திகேயனின் முழு உடலை பரிசோதித்து வருவதாகவும் தெரிகிறது. இந்த டெக்னாலஜி கல்கி திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதுபோல ஹாலிவுட்டில் மிகப் பிரபலமான திரைப்படங்களான தி அவெஞ்சர்ஸ், ஸ்பைடர் மேன் போன்ற பெரிய பெரிய படங்களிலும் இந்த டெக்னாலஜி தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
பெரிய பட்ஜெட்;
அந்த வகையில் சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு இணையும் இந்த படம் ஒரு பெரிய அளவு விஷுவல் ட்ரீட்டை கொடுக்கும் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் கண்டிப்பாக இது ஒரு பெரிய பட்ஜெட் திரைப்படமாகவும் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் ரேஞ்ச் உயர்ந்து கொண்டே தான் இருக்கின்றது. அடுத்தடுத்த படங்கள் அவருக்கு ஹிட் கொடுத்தால் நிச்சயம் யாரும் எட்ட முடியாத இடத்தை சிவகார்த்திகேயன் நெருங்கி விடுவார்.
சமீபத்தில் கூட ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசிய சிவகார்த்திகேயன் அவருடைய ரசிகர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார். என்னை ஆராதிக்கும் ரசிகர்கள் எனக்கு வேண்டாம். கடவுளையும் தாய் தந்தையையும் மட்டும் வழிபட்டால் போதும். என்னை ஒரு நண்பனாகவும் சகோதரராகவும் பார்க்கும் ரசிகர்கள் தான் எனக்கு வேண்டும். நான் என் ரசிகர்களை குடும்பமாகத்தான் கருதுகிறேன் என்று கூறியிருந்தார் சிவகார்த்திகேயன். இதைக் கூட அஜித் பாணியை பின்பற்றும் சிவகார்த்திகேயன் என கிண்டலாக சோசியல் மீடியாக்களில் பதிவிட்டு வந்தனர்.
