Connect with us
siva

Cinema News

‘விடுதலை’ படத்திற்கு எதிராக சேலஞ்ச் விட்ட சிவகார்த்திகேயன்! சரியான போட்டிதான்

Actor Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் ஒரு டாப் மாஸ் ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். நடிகராக தயாரிப்பாளராக பாடகராக பாடல் ஆசிரியராக என பன்முக திறமைகள் கொண்ட ஒரு கலைஞராக இன்று மக்கள் மத்தியில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து கஷ்டப்பட்டு மிகவும் போராடி இன்று வெள்ளித்திரையில் ஒரு மாபெரும் நடிகராக வளர்ந்திருக்கிறார் என்றால் அவருடைய கடின உழைப்பே காரணமாகும்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் இன்று சூரி நடித்த கருடன் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்திருந்த விஜய் சேதுபதி, சூரி, வெற்றிமாறன் என அனைவரிடமும் கைகுலுக்கி விட்டு சகஜமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது மேடையில் பேசிய சிவகார்த்திகேயன்  ‘ஒரு சீரியஸான நடிகரால் காமெடியை எளிதாக பண்ண முடியாது. ஆனால் ஒரு காமெடி நடிகராl ஒரு சீரியஸான கதாபாத்திரத்தில் எளிதாக நடிக்க முடியும்.

இதையும் படிங்க: மீண்டும் ரூம் பிரச்னையை கிளறிவிட்டாங்களே… எண்ட்டே இல்லையா சார் இதுக்கு…

அதற்கு சூரி ஒரு உதாரணம். என்னுடைய தயாரிப்பில் சூரி  நடிக்கும் திரைப்படம் கொட்டுக்காளி. அந்த திரைப்படம் விடுதலை படத்தை விட அதிக வரவேற்பை பெறும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்’ என கூறியிருக்கிறார். இது மறைமுகமாக விடுதலை படத்திற்கு எதிராக அவர் சவால் விட்டிருக்கிறார் என்பது தெரிகிறது.

விடுதலை படமே மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. இந்த படம் ஒரு ஆழமான கருத்தை பதிவு செய்தது .சிவகார்த்திகேயன் இப்படி சொன்னதிலிருந்து பார்க்கும்போது கொட்டிக்காளி திரைப்படம் வேற ஒரு மாதிரியான கதைக்களமாக இருக்கும் என்று தெரிகிறது.

இதையும் படிங்க: எம்.எஸ்.விக்கே பிடிக்காத பாடல்!.. நம்பிக்கை சொன்ன கண்ணதாசன்!.. அட அந்த சூப்பர் ஹிட் பாட்டா?!..

Continue Reading

More in Cinema News

To Top