Categories: Cinema News latest news

யாரு ஏமாறுவங்களோ அவங்களை ஏமாற்றிவிட வேண்டியது தான்.! சிவகார்த்தியின் இன்னோர் முகம் இதோ..

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து மெகா ஹிட் / சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தவிர்க்கமுடியாத இளம் நடிகராக மாறியுள்ளார் சிவகார்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக பிரின்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு திரைக்குவரவுள்ளது.

இவர் நடிப்பது மட்டுமல்லாமல், தனது SK பட நிறுவனம் மூலம், நல்ல படங்களை தயாரித்தும் வருகிறார். இவர் அண்மையில் கொடுத்த நேர்காணல் தான் தற்போது வைரலாக பரவிவருகிறது.

அதில், தான் , ஒரு மொபைல் போனை  ஒரு மாதத்திற்கு மேலாக உபயோகப்படுத்த மாட்டேன். 15 நாள் கூட ஒரு புது போனை மாற்றி இருக்கிறேன்.  அப்போது எனது சித்தப்பா , மாமா யாரேனும் சொந்தகாரங்க கேப்பாங்க நான் அவங்க கிட்ட போன் காச அப்படியே வாங்கிருவேன்.

இதையும் படியுங்களேன் – உண்மையில் சொல்லி அடிச்ச கில்லி.. விஜய் இல்ல.? இவர் தான்.! வெளியான சூப்பர் சீக்ரெட்…

ஒரு மாசம் யூஸ் பண்ணிட்டு, அதே காசுக்கு வித்துடுவேன். நம்மகிட்ட யாரு ஏமாறுவங்களோ அவங்கள தானே ஏமாத்த முடியும் என மிகவும் ஜாலியாக தனது குறும்பு தனத்தை வெளியில் கூறினார். சினிமாவில் மட்டுமல்ல திரை மறைவிலும், மிகவும் ஜாலியான நபராக தான் சிவகார்த்திகேயன் இருக்கிறார்.

Manikandan
Published by
Manikandan