சிவகார்த்திகேயனை விட்டுட்டு 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' பார்ட் 2-வை எடுக்கும் பொன்ராம்... ஹீரோ யார் தெரியுமா?
Jul 14, 2026, 17:52 IST
சிவகார்த்திகேயனை வைத்து 'வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா' என மூன்று படங்களை இயக்கியவர் தான் இயக்குநர் பொன்ராம்.
இதில் முதல் இரண்டு படங்கள் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. அதுவும் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்படம் சிவகார்த்திகேயனையே அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றது.
தற்போது, 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் பார்ட் 2 உருவாகப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தையும் இயக்குநர் பொன்ராமே இயக்கவுள்ளாராம்.

இதில் ஹீரோவாக ரியோ ராஜ் நடிக்கவிருக்கிறார். மேலும், அவரே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'River Route ஸ்டுடியோஸ்' மூலம் இப்படத்தை தயாரிக்கவுள்ளாராம்.
