×

பாலா படத்துக்கு ப்ரோமோஷன் செய்யும் சிவகார்த்திகேயன்… எல்லாம் காலம்!

இயக்குனர் பாலா தயாரிக்க உள்ள ஜோசப் மலையாள படத்தின் ரீமேக்கின் முதல் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட உள்ளாராம்.

 

இயக்குனர் பாலா தயாரிக்க உள்ள ஜோசப் மலையாள படத்தின் ரீமேக்கின் முதல் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட உள்ளாராம்.

ஒரு காலத்தில் இயக்குனர் பாலா ஒரு படம் இயக்குகிறார் என்றாலோ அல்லது தயாரிக்கிறார் என்றாலோ திரையுலகமே அதை உற்றுக் கவனிக்கும். அந்த அளவுக்கு அவர் மேல் மரியாதையும் அவர் படங்களின் மீதான ஆவலும் இருக்கும். ஆனால் சமீபகாலமாக அவர் எடுத்த படங்கள் எல்லாம் தோல்வி அடைய இப்போது அவர் இயக்கத்தில் நடிக்கக் கூட எந்த ஹீரோவும் முன் வருவதில்லை.

இந்நிலையில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஜோசப் என்ற படத்தை தமிழில் ஆர் கே சுரேஷ் நடிக்க இயக்குனர் பாலா தயாரிக்க உள்ளார். அதற்கான ஆரம்ப கட்ட பணிகள் முடிந்து இப்போது படப்பிடிப்புக்கு தயாராக உள்ளது படக்குழு.  இந்நிலையில் படத்தின் முதல் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் நாளை வெளியிட உள்ளார். பாலா படத்துக்கே ப்ரோமோஷன் செய்யும் அளவுக்கு சிவகார்த்திகேயன் குறுகிய காலத்தில் உச்சத்தை தொட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News