ரஜினிக்கு அப்புறம் எஸ்.கே.தான்!.. புது படத்துக்கு வாங்கிய சம்பளம் என்ன தெரியுமா?..
கோலிவுட்டில் உள்ள முக்கியமான நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். துவக்கத்தில் காதல் கலந்த காமெடி படங்களில் மட்டுமே நடித்துவந்த சிவகார்த்திகேயன் ஒரு கட்டத்தில் அமரன் போன்ற சீரியஸ் படங்களிலும் நடிக்க துவங்கினார். இந்த படத்திற்கு முன் ஹீரோ, வேலைக்காரன் போன்ற சீரியசான கதைகளில் நடித்து பார்த்தாலும் அந்த படங்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை. எனவே மீண்டும் காதல் கலந்த காமெடி வகை படங்களுக்கு மாறினார். அப்படித்தான் டான், டாக்டர் போன்ற படங்கள் அவருக்கு ஹிட் அடித்தது.
தற்போது அமரன் படம் கொடுக்க வெற்றியின் காரணமாக தொடர்ந்து சீரியசான படங்களில் நடிக்க தொடங்கியிருக்கிறார். தற்போது சுதா கொங்கார இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் 2026 பொங்கலுக்கு வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஏ.ஆர் முருகதாஸில் இயக்கத்தில் வெளியான மதராஸி படமும் ஒரு சீரியசான ஆக்சன் படமாக வெளிவந்து சுமாரான வெற்றியை பெற்றது.
அடுத்து சிவகார்த்திகேயன் இரண்டு புதிய திரைப்படங்களில் நடிக்கவுள்ளார். அதில் ஒன்று வெங்கட் பிரபு இயக்கவுள்ள படம். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. அமரன் பட வெற்றிக்கு பின் தனது சம்பளத்தை 70 கோடியாக உயர்த்தினார் சிவகார்த்திகேயன். ஆனால் மதராஸி படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால் சிவகார்த்திகேயன் இந்த படத்திற்கு 40 கோடி மட்டுமே சம்பளமாக கேட்டிருக்கிறாராம்.

திரையுலகில் ரஜினி மட்டுமே தனது முந்தைய படம் சரியாக போகவில்லை என்றால் சம்பளத்தை குறைப்பார். மற்ற நடிகர்கள் அப்படி குறைக்கமாட்டார்கள். ரஜினிக்கு அடுத்து சிவகார்த்திகேயன் மட்டுமே இப்படி சம்பளத்தை குறைத்திருக்கிறார் என பேசுகிறார்கள். அதேநேரம் பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சிபிச் சக்கரவர்த்தி இயக்கவுள்ள படத்தில் நடிப்பதற்கு சிவகார்த்திகேயன் 65 கோடி சம்பளம் பேசியிருக்கிறார் என்கிறார்கள்.
அதாவது, ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன். இரண்டு படங்களுக்கும் சேர்த்து பெரிய தொகையை அட்வான்ஸாகவும் வாங்கி இருக்கிறாராம். வெங்கட் பிரபு படத்தை 2026 பொங்கலுக்கு பின்னால் துவங்கவுள்ளனர் எனவும் சிபிச்சக்ரவர்த்தி படம் விரைவில் துவங்கவுள்ளனர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
