Categories: Cinema News latest news

பிரம்மாண்ட ஏலியன் படத்திற்கு வந்த சிக்கல்… உதவி கேட்டு வந்த தயாரிப்பாளருக்கு “நோ” சொன்ன சிவகார்த்திகேயன்…

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட சைன்ஸ் பிக்சன் திரைப்படம் “அயலான்”. இத்திரைப்படத்தை ஆர்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் “இன்று நேற்று நாளை” என்ற வெற்றித் திரைப்படத்தை இயக்கியவர்.

“அயலான்” திரைப்படம் ஏலியனை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பிரம்மாண்ட திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு இத்திரைப்படத்திற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Ayalaan

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கியது.  அதன் பின் பல பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியிலும், கொரோனா லாக் டவுன் காரணமாகவும் படப்பிடிப்பு தடை பட்டுக்கொண்டே வந்தது. எனினும் கடந்த ஆண்டு இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.

இதில் இடம்பெற்ற ஏலியன் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் முழுக்க முழுக்க கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டு வருவதால், இத்திரைப்படத்தின் வெளியீடு தாமதமாகிக்கொண்டே வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sivakarthikeyan

இந்த நிலையில் “அயலான்” படத்தின் தயாரிப்பாளரான ராஜேஷும் சிவகார்த்திகேயனும் சமீபத்தில் சந்தித்துக்கொண்டார்களாம். “அயலான்” படத்தை முழுவதுமாக முடிப்பதற்காக முப்பது கோடி ரூபாய் தேவைப்படுகிறதாம். ஆதலால் சிவகார்த்திகேயனிடம் வேறு புதிய திரைப்படத்திற்கான கால்ஷீட்டை தரச்சொல்லியும் அதனை வைத்து சில ஃபைனான்சியர்களிடம் பணம் தேற்றி, “அயலான்” திரைப்படத்தின் பணிகளை முழுவதுமாக முடிக்கவும் தயாரிப்பாளர் ராஜேஷ் முடிவெடுத்திருந்தாராம்.

இருவரும் சந்தித்தபோது ராஜேஷ், இந்த விஷயத்தை சிவகார்த்திகேயனிடம் கூறினாராம். அதற்கு சிவகார்த்திகேயன் கால்ஷீட் தர மறுத்துவிட்டாராம். ஆதலால் “அயலான்” திரைப்படம் மீண்டும் பொருளாதார சிக்கலில் இருப்பதாக கூறப்படுகிறது.

Arun Prasad
Published by
Arun Prasad