சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று கோலாகலமாக வெளியாகியுள்ள திரைப்படம் டான். அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயன் பட நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முழுக்க முழுக்க கல்லூரி பள்ளிப்பருவ கலாட்டாக்களை அதன் சுவாரஸ்யம் குறையாமல் படமாக்கியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த வெற்றிகொண்டத்தை நேரில் காண, சிவகார்த்திகேயன் சென்னையில் உள்ள தியேட்டர்களில் விசிட் அடித்துள்ளார். சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கு மற்றும் ரோகினி ஆகிய திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களின் ஆரவாரத்தை நேரில் பார்த்து வந்துள்ளாராம்
இதையும் படியுங்களேன் – பாக்ஸ் ஆபிஸ் கிங் சிவகார்த்திகேயன்.!? அனல் பறக்கும் ‘டான்’ டிவிட்டர் விமர்சனம் இதோ.,
சென்னை திரையரங்குக்குகளுக்கு நேரில் சென்று ரசிகர்களுடன் பார்த்த அனுபவத்தை சிவகார்த்திகேயன் போனில் வீடியோ எடுத்து அதனை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் இந்த அளவு படத்தை கொண்டாடுவதை நேரில் பார்த்த சிவகார்த்திகேயன் ஒரே கொண்டாட்டத்தில் இருக்கிறாராம்.
நடிகரும் தவெக…
TVK Karur:…
Vijay TVK…
ரங்கராஜ் முகத்திரை…
TVK Vijay:…