×

ஹெச். ராஜாவிற்கு சரியான பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சிவகார்த்திகேயன் ரூ. 1 லட்சம் நன்கொடை அளித்திருக்கிறார். தன் தந்தை ஜி. தாஸ் பெயரில் இயக்கும் அறக்கட்டளை மூலம் ரூ. 1 லட்சத்திற்கான காசோலையை அளித்திருக்கிறார். 

 
Sivakarthikeyan-hero

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சிவகார்த்திகேயன் ரூ. 1 லட்சம் நன்கொடை அளித்திருக்கிறார். தன் தந்தை ஜி. தாஸ் பெயரில் இயக்கும் அறக்கட்டளை மூலம் ரூ. 1 லட்சத்திற்கான காசோலையை அளித்திருக்கிறார். 

அந்த காசோலையை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதற்கு இரண்டு காரணம் இருக்கிறது. ஒன்று சிவகார்த்திகேயன் நன்கொடை அளித்தது. இரண்டு காசோலை மூலமாக பாஜக நிர்வாகி ஹெச். ராஜாவுக்கு சிவகார்த்திகேயன் பதிலடி கொடுத்திருப்பதாக ரசிகர்கள் நம்புகிறார்கள்.

சிவகார்த்திகேயனுக்கும், ஹெச். ராஜாவுக்கும் என்ன பஞ்சாயத்து என்று கேட்கிறீர்களா?. செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஹெச். ராஜா, ஜெய்லர் ஜெயபிரகாஷை கொலை செய்தது இன்றைய பாபநாசம் எம்.எல்.ஏ. அவருடைய மகன் இன்று பிரபல சினிமா நட்சத்திரம் சிவகார்த்திகேயன் என்றார்.

சிவகார்த்திகேயனின் தந்தை பெயர் ஜி. தாஸ். அப்படி இருக்கும்போது ஹெச். ராஜா சிவகார்த்திகேயன் அப்பாவின் மரணம் குறித்து சர்ச்சையை கிளப்பியது ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இயற்கையாக இறந்தவரை போய் கொலை செய்யப்பட்டுவிட்டார் என்கிறாரே, சிவா அண்ணா, ஏன் சும்மா இருக்கீங்க, அவருக்கு பதிலடி கொடுங்கள் என்றார்கள் ரசிகர்கள். ஆனால் சிவகார்த்திகேயனோ எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

இந்நிலையில் அவர் அளித்த காசோலை தான் ஹெச். ராஜாவுக்கு பதில் என்கிறார்கள் ரசிகர்கள். சிவகார்த்திகேயனின் தந்தை பற்றி பேசியபோது பி.டி.ஆர். தியாகராஜன் பற்றியும் பேசினார் ஹெச். ராஜா. அது குறித்து தியாகராஜனிடம் கேட்டதற்கு, வெறி பிடித்த நாய் குரைப்பதற்கு எல்லாம் என்னால் பதில் அளிக்க முடியாது என்றார்.

From around the web

Trending Videos

Tamilnadu News