Categories: Cinema News latest news

நடராஜன் பயோபிக்!.. புது யுக்தியை கையிலெடுக்கும் சிவகார்த்திகேயன்!.. வேற லெவல் போங்க..

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். நடிக்க வந்த குறைந்த காலத்திலேயே சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்திற்கு மக்கள் மனதில் இடம் பெற்றுவிட்டார் சிவகார்த்திகேயன். யாருமே ஏன் அவர் கூட இந்த நிலைமையை அடைவோம் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்.

sivakarthikeyan

விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த சிவகார்த்திகேயன் இன்று அந்த தொலைக்காட்சியில் நடக்கும் பல நிகழ்ச்சிகளுக்கு விருந்தினராக சென்று வருகிறார். மேலும் தான் கடந்து வந்த பாதையையும் மறக்கவில்லை சிவகார்த்திகேயன்.

இதையும் படிங்க : சிவாஜி வீட்டு பிரியாணி விருந்து.. ரஜினி பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவங்கள்…

நடிப்பு மட்டுமில்லாமல் தயாரிப்பாளராக, பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக பன்முக திறமைகளை ஒங்கே பெற்றவராக சிவகார்த்திகேயன் விளங்கி வருகிறார். அவரின் நடிப்பில் வெளியான சமீபகால படங்களால் சிவகார்த்திகேயன் புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார்.

nadarajan

தொடர்ந்து டாக்டர், டான், போன்ற படங்களின் வெற்றி அவரை எங்கேயோ கொன்று சென்று விட்டது. அடுத்ததாக மடோனா அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்று கூடுதலாகவே ரசிகர்கள் மனதில் இருக்கின்றது. ஒரு பக்கம் சிவகார்த்திகேயன் இன்னொரு பக்கம் மண்டேலாவின் அபார வெற்றி கொடுத்த மடோனா அஸ்வின்.

இதையும் படிங்க : 9 ஆண்டுகளுக்குப் பிறகு பொங்கலுக்கு மோதும் அஜீத்-விஜய் படங்கள்.. யாருக்கு வெற்றி?..

இந்த படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் கிரிக்கெட் வீரர் நடராஜனின் பயோபிக் படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வைரலாகி வருகின்றது. ஆனால் இந்த படத்தை இயக்கப் போவது யாரு என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்து கொண்டே வந்தது. ஏற்கெனவே சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் கனா என்ற கிரிக்கெட் கதையை மையமாக வைத்து ஒரு படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது.

sivakarthikeyan

ஒரு வேளை மீண்டும் அருண்ராஜா இயக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது என்ற தகவல்களும் வெளிவந்தது. ஆனால் அந்த படத்தை இயக்கப்போவதே நடிகர் சிவகார்த்திகேயன் தானாம். அது மட்டுமில்லாமல் அவரே எழுதி படத்தை இயக்கப்போகிறாராம். இந்த படத்தின் மூலம் இயக்குனராக புதிய அவதாரம் எடுக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini