‘எஸ்கே 25’ படத்தில் யாருக்குமே சம்பளம் இல்லையா? ஆனா அதுக்கு பதிலா இப்படி ஒரு டீலிங்
தற்போது சமூக வலைதளங்களில் சிவகார்த்திகேயன் இப்போது நடிக்கும் அவருடைய 25வது படத்திற்கான சம்பளம் பற்றிய தகவல் தான் வைரலாகி வருகின்றது. அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் மீது ஒட்டுமொத்த ரசிகர்களின் பார்வையும் திரும்பி இருக்கிறது.
அவருடைய அடுத்த அடுத்த ப்ராஜெக்ட் என்னென்ன? யாருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்பதைப் பற்றி ரசிகர்கள் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கின்றனர். அந்த வகையில் ஏ ஆர் முருகதாஸுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். சிபிச் சக்கரவர்த்தியுடன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.
இதற்கு இடையில் சுதா கொங்கராவுடனான படத்தின் படப்பிடிப்பிற்கான பூஜை சமீபத்தில் தான் போடப்பட்டது. தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக இருப்பவர் சுதா கொங்கரா. அவர் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் இந்த படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்த படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்க இருக்கிறார். கூடவே அதர்வாவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் சம்பளம் பற்றிய தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது .அமரன் திரைப்படத்தின் தமிழ் நாட்டின் ஷேர் 70 கோடி என சொல்லப்படுகிறது.
அதனால் அதே சம்பளம் தான் சுதா கொங்கரா படத்தில் சிவகார்த்திகேயனுக்கும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுதான் இல்லை. ஏனெனில் படத்தின் ரெவன்யூ ஷேர் என்ற விகிதத்தில் சிவகார்த்திகேயன் சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம்.
அதைப்போல ஜெயம் ரவி, சுதா கொங்கரா ஆகிய இருவரின் சம்பளமும் ரிவென்யூ ஷேர் என்றுதான் எக்ரீமெண்ட் போடப்பட்டிருக்கிறதாம். இதில் படத்தின் மொத்த பட்ஜெட் 162 கோடி என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சுதா கொங்கரா இந்த படத்தை ஃபர்ஸ்ட் காபி என்ற அடிப்படையில் தான் எடுக்க இருக்கிறாராம்.
இதில் அட்வான்ஸ் தொகையாக சிவகார்த்திகேயனுக்கு 10 கோடியும் ஜெயம் ரவிக்கு 5 கோடியும் தரப்பட்டதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.