Categories: Cinema News Gossips latest news

தளபதி விஜய் 17 முறை.! சிவகார்த்திகேயன் 15 முறை.! யாரு பெருசுனு அடிச்சி காட்டு.!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஏவிஎம்-ன் பிரம்மாண்ட தயாரிப்பில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் என அத்தனை பிரம்மிப்புகளையும் ஒரே நேரத்தில் கொடுத்த திரைப்படம் என்றால் அது சிவாஜி திரைப்படம் தான். 2007 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் அதற்கு முந்தைய வசூல் சாதனைகளை எல்லாம் தவிடு பொடியாக்கியது.

இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மட்டுமின்றி பல்வேறு திரை நட்சத்திரங்களுக்கும், தற்போது வரை ஃபேவரட் படமாக இருக்கிறது. ரஜினியின் ஸ்டைல், மாஸ், ஆக்ஷன் என அனைத்தும் கலந்த திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்தது. அதனை மிஞ்சிய திரைப்படத்தை இன்னும் ரஜினிகாந்த் கூட  கொடுக்க முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

இது திரைப்படம் அண்மையில்  தனது 15ஆம் ஆண்டை நிறைவு செய்தது. இந்த மகிழ்ச்சியை ஏவிஎம் நிறுவனம் ட்விட்டர் மூலம் பகிர்ந்து கொண்டது. அப்போது அதில் பதிலளித்த சிவகார்த்திகேயன், இந்த படத்தை நான் 15 முறை பார்த்துள்ளேன் என்று பதிவிட்டிருந்தார்.

இதையும் படியுங்களேன் – ஷங்கரின் மெகா ஹிட் படத்தை ஜஸ்ட் மிஸ் செய்த விஜய்!… 23 வருடம் கழித்து வெளிவந்த உண்மை தகவல்கள்.!

இதனை பார்த்த விஜய் ரசிகர்கள், விஜய் கொடுத்த ஒரு பழைய பத்திரிகை பேட்டியில், சிவாஜி படத்தை 17 முறை பார்த்ததாகக் குறிப்பிட்டு இருக்கிறார். அந்த பத்திரிகை புகைப் படத்தையும் ஒப்பிட்டு விஜய் தான் மிகப்பெரிய ரஜினியின் ரசிகர் என இணையத்தில் பேசி வருகின்றார்.

யார் யாருடைய மிகப்பெரிய ரசிகர் என்பதை ஒரு படத்தை இத்தனை முறை பார்த்தால் தான் நிரூபிக்க முடியும் என்பதில்லை. அவர்களை போல நல்ல கமர்சியல் திரைப்படங்கள் தேர்ந்தெடுத்து நடித்து வந்தாலேபோதும். இதன் மூலம் தான் மிகப்பெரிய ரசிகர் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் இல்லை என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.

Manikandan
Published by
Manikandan