சிம்புவும் சிவகார்த்திகேயனும் வெறித்தனமா இருக்காங்களே.. அரசனை தொடர்ந்து சேயோனும் செம ஸ்பீடு!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று மதுரையில் தொடங்கியுள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சமீபத்தில் தான் சிம்புவின் அரசன் படமும் அடுத்தக் கட்ட படப்பிடிப்பை ஆரம்பித்தது. இந்த ஆண்டு இறுதியில் சிவகார்த்திகேயன், சிம்பு இருவரும் கம்பேக் கொடுக்க தீயாக வேலை பார்த்து வருகின்றனர்.
இப்படத்தை தாய் கிழவி எனும் பிளாக்பஸ்டர் படத்தைக் கொடுத்த இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். சிவகார்த்திகேயனின் 26-வது படமாக உருவாகி வரும் இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. ‘அமரன்’ படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆடி வெள்ளி பூத்திருச்சு
— Turmeric Media (@turmericmediaTM) August 11, 2026
புது பொழுது விடிஞ்சிருச்சு
சேயோன் ஷெட்யூல் 2 இன்று தொடங்கிருச்சு🔥#சேயோன் #Seyon #VetrivelVeeravel #Varendi#KamalHaasan #Sivakarthikeyan@ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @Dir_SivakumarM @Music_Santhosh #BhagyashriBorse @RajbShettyOMK @RKFI… pic.twitter.com/CMVvZHnh7w
‘சேயோன்’ திரைப்படம் மதுரையை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகி வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு மதுரையில் நடைபெற்ற நிலையில், அது கடந்த ஜூன் மாதம் நிறைவடைந்தது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடங்கியுள்ளது.இந்த கட்ட படப்பிடிப்பு ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற இருப்பதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்கிறார். மேலும் பால சரவணன், அருள்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
‘சேயோன்’ திரைப்படம் 2026 அக்டோபர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ள நிலையில், அடுத்தடுத்த படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை வேகமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.