கொரோனா இரண்டாவது அலை ஓய்ந்த பின்னர் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்து திரையரங்கிற்கு மீண்டும் கூட்டத்தை வரவைத்து திரைப்படம் டாக்டர். அந்தளவுக்கு ரசிகர்களை சிரிப்பலையில் மூழ்கடித்த திரைப்படம்.
இந்த திரைப்படத்தை சிவகார்த்திகேயன் தான் தயாரித்திருந்தார். நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் பற்றிய சில நிகழ்வுகளை சிவகார்த்திகேயன் பகிர்ந்து கொண்டார்.
அதில் அவர் கூறும் போது, இதுவரை எனது படங்களின் எடிட் செய்த பைனல் கட் வெர்சனை ரிலீசுக்கு முன்பே பார்த்துவிடுவேன். ஆனால், டாக்டர் படத்தை நான் அப்படி பார்க்கவில்லை.
படம் எப்போது வேண்டுமானாலும் ரிலீஸ் ஆகட்டும் தியேட்டரில் ரசிகர்களோடு பார்த்துக்கொள்கிறேன் என காத்திருந்து தியேட்டரில் ரசிகர்களோடுதான் பார்த்தேன். இனியும் நாம்மால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்து ரிசல்ட்டை ரசிகர்களிடம் விட்டுவிடுவோம் என முடிவு எடுத்துள்ளேன் என பகிர்ந்துள்ளார்.
நடிகரும் தவெக…
TVK Karur:…
Vijay TVK…
ரங்கராஜ் முகத்திரை…
TVK Vijay:…