ஐ லவ் யூ அனிருத்!.. டிசி படம் வேறலெவல்!.. சேயோன் சிவகார்த்திகேயன் பாராட்டு!..
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘DC’ திரைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார். இப்படத்தை பார்த்த பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பகிர்ந்த சிவகார்த்திகேயன், படக்குழுவினரையும் குறிப்பாக இசையமைப்பாளர் அனிருத்தையும் புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.
“DC ஒரு அட்டகாசமான சினிமா அனுபவம். லோகேஷ் கனகராஜும் அருண் மாதேஸ்வரனும் இணைந்து பல சிறப்பான தருணங்கள் நிறைந்த வலுவான ஆக்ஷன் படத்தை கொடுத்துள்ளனர். படத்தில் நடித்த அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்” என சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார்.
After watching #DC, @Siva_Kartikeyan showers love on the team ❤️ pic.twitter.com/9KhyMw5ts7
— 𝐕𝐚𝐦𝐬𝐢𝐒𝐡𝐞𝐤𝐚𝐫 (@UrsVamsiShekar) August 13, 2026
மேலும், தனது நண்பரும் இசையமைப்பாளருமான அனிருத்தின் இசைப் பணியை பாராட்டியுள்ளார். “எனது கனவுகளின் ராக்ஸ்டார், என் நண்பன் அனிருத் மீது பெருமையாக இருக்கிறேன். தனக்கென ஒரு சிம்மாசனத்தை உருவாக்கி, அதில் அமர்ந்து தனக்கே உரிய பாணியில் ஆட்சி செய்து வருகிறார். உன்னை மிகவும் நேசிக்கிறேன்” என்ற வகையில் அவர் தனது பாராட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
இதனிடையே சிவகார்த்திகேயனின் 26-வது படமான ‘சேயோன்’ படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. ‘அமரன்’ படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் – கமல்ஹாசன் கூட்டணி மீண்டும் இணையும் படம் என்பதால் இப்படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
ஒருபுறம் ‘DC’ படத்தை பாராட்டி சிவகார்த்திகேயன் வெளியிட்ட பதிவு கவனம் பெற்றுள்ள நிலையில், மறுபுறம் அவரது ‘சேயோன்’ படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.