சேயோன் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிவகார்த்திகேயன்!.. மலைமேல நின்னு சும்மா மாஸ் காட்டுறாரே!..
முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தற்போது தனது அடுத்த பிரம்மாண்ட படைப்பான ‘சேயோன்’ திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புதிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
அந்த புகைப்படத்துடன், “அழகான தேசம். அழகான அணி. அழகான தொடக்கம்” என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ரசிகர்கள் ஆயிரக்கணக்கான லைக்குகள் மற்றும் கருத்துக்களை பதிவிட்டு தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம், மதுரையின் வாழ்வியல் மற்றும் கிராமிய கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது.
சிவகார்த்திகேயனுடன் இணைந்து பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்த ஆண்டு இறுதியில் படம் திரையரங்குகளில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
‘சேயோன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் மேலும் பல அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
